Petrol and Diesel Price: சென்னையில் 104-ஆவது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamilnadu News Update: தமிழகத்தில் இன்று நர்சரி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மேலும், திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கும் இன்று முதல் அனுமதிக்கப்படுகின்றன.
வேலைக்காக காத்திருப்பு: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு 75 லட்சம் பேர் காத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கல்வி அதிகாரி பணியிடை நீக்கம்: திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்தது தொடர்பாக திருவண்ணாமலை கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
India News Update: உத்தரப் பிரதேச இரண்டாம் கட்ட தேர்தலில் 64.4 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காங்கிரசில் இருந்து விலகல்: உத்வேகம் தருகிற கட்சித் தலைமை இல்லை எனக் கூறி முன்னாள் மத்திய சட்டத் துறை அமைச்சர் அஸ்வினி குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.
Corona update: உலகளவில் இதுவரை 41.57 கோடி பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 33.84 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 58.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி என்று திமுக அரசு அறிவித்துள்ளது. 35 லட்சம் பேரிடம் வட்டி வாங்கி 13 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது என்றும், திமுக அரசு அறிவித்தப்படி நகைக்கடனை தள்ளுபடி செய்யவில்லை என்றும் ஒசூர் மாநகராட்சி வார்டுகளில் ஈ.பி.எஸ். பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
கோவில்களுக்கு சொந்தமான ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்களை 991 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளதாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
தேசிய தலைமை பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இல்லத்திற்குள் நுழைய முயன்றவரை கைது செய்தது காவல்துறை. அத்துமீறி நுழைய முயன்றவர் மனநலம் பாதித்தவர் என முதற்கட்ட விசாரணையில் தகவல்
செங்கல்பட்டு, திருச்சி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் 12 பேர் கட்சியில் இருந்து நீக்கம். அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக களம் இறங்கிய 12 அதிமுகவினரை கட்சியில் இருந்து நீக்கி அறிவித்துள்ளது அதிமுக தலைமை.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் சேலம் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து இளைஞரணி தலைவர் அன்புமணி பிரசாரம் செய்து வருகிறார். கடை கடையாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும் வாக்கு சேகரிப்பு
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாக உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இழப்பீடாக செலுத்திய ₨68 கோடியை திரும்ப பெறுவதாகவும் சென்னை வருவாய் கோட்டாட்சியர் மனுவில் கூறப்பட்டுள்ளது.
10 மற்றும் 12ம் வகுப்பு வினாத்தாள்கள் வெளியான விவகாரம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மை அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைவதை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வருகின்ற பிப்ரவரி 18ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவர் சந்தீப் சேத் தலையிலான 6 மருத்துவர்கள் அடங்கிய குழு அமைப்ப்பு
மழலையர் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்தியாவில் மேலும் 30,615 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,27,23,558 ஆக அதிகரிப்பு என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 70 லட்சம் மோசடி செய்த தம்பதியர் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி கரோல் பாகில் உள்ள ரவிதாஸ் ஆலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.
பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹிரி உடல்நலக்குறைவால் காலமானார்.
ஈரோடு அந்தியூர் அருகே திமுக வேட்பாளர் எம்.ஐயப்பன் என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
சென்னையில் 3-வது மாடி வீட்டினுள் உள் பக்கமாக பூட்டி சிக்கிக்கொண்ட சிறுமியை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். சென்னை விருகம்பாக்கம் ரெட்டி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 7 வயது சிறுமி சாய் கிராணா தனது வீட்டிற்குள் யாருமில்லாத நேரத்தில் உள் பக்கமாக பூட்டிக் கொண்டார்.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
உக்ரைனில் போர் வெடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
7 வாக்குறுதிகளை கூட முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டினார்.
சென்னை, நந்தனத்தில் 45வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் இதுவரை ரூ.9.28 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழகத்தில் இதுவரை ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முதல்வரின் மிரட்டல்களுக்கு அதிமுகவினர் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள் என்று எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த எஃப்ஐஆர் படத்தில் முஸ்லிம்களை தவறாக சித்தரித்துள்ளதாகவும் எனவே அந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி இந்திய தேசிய லீக் கட்சியினர் விஷ்ணு விஷாலின் வீட்டை முற்றுகை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது.