ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை தவிர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில், உலகத்தின் பார்வை முழுவதும் இப்போது ரஷ்யா-உக்ரைன் மீது தான் உள்ளது. இரு நாடுகளும் இடையில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.
ரஷ்ய படைகள் இன்று தாக்கலாம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) அறிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் எல்லையில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளது. மேலும், உக்ரைன் எல்லையில் இருந்து 110 கி.மீ., தொலைவில் கூடாரம் போட்டு, போருக்கான முழு ஆயத்தங்களையும் ரஷ்ய ராணுவம் செய்துள்ளதை செயற்கைக்கோள் படங்களில் தெளிவாகக் காணலாம்.
இதற்கிடையில், அமெரிக்கா மீண்டும் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தனது அறிக்கையில், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு, உறுதியான பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றார். ரஷ்யாவுடன் நேரடியாக மோதும் சூழ்நிலையை அமெரிக்கா விரும்பவில்லை என்றாலும், உக்ரைனில் உள்ள அமெரிக்க குடிமக்களை ரஷ்யா குறிவைத்தால், தக்க பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கிறார்.
நெருக்கடி மேகங்கள் தலைக்கு மேல் சூழ்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உக்ரைனுக்கு உதவ கனடாவும் முடிவு செய்துள்ளது. உக்ரைனுக்கு 7 மில்லியன் டாலர் மதிப்புள்ள சக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்குவதாக கனடா கூறியுள்ளது. இந்த ஆயுதங்களில் இயந்திர துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், கார்பைன்கள், 1.5 மில்லியன் தோட்டாக்கள், துப்பாக்கிகள் மற்றும் பிற உபகரணங்கள் ஆகியவை அடங்கும். அ
மேலும் படிக்க | US vs Russia: ரஷ்யா – உக்ரைன் சர்ச்சை! போரைத் தொடங்க படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா?
இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா செவ்வாயன்று ரஷ்யாவுடனான தற்போதைய மோதலுக்கு இராஜதந்திர தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். உக்ரைப் பதற்றம் காரணமாக, இந்தியா நாட்டை சேர்ந்த மாணவர்களை உக்ரை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ள நிலையில், மாணவர்களை திரும்ப அழைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இல்லை என்பதால், இந்தியா அவசரப்படக் கூடாது என்றார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் மூளலாம் என்பது போன்ற அறிக்கைகள் வெளியாகின்றன. இங்கே பொர் சூழல் இல்லை,. இது போன்ற செய்திகள் உக்ரைனின் பொருளாதார நிலையை பாதிக்கும் என குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், உக்ரைனின் அரசாங்க வலைத்தளங்கள் மற்றும் பெரிய வங்கிகள் சைபர் தாக்குதல்களால் தாக்கப்பட்டன. உக்ரைனில் குறைந்தது 10 இணையதளங்கள் வேலை செய்வதை நிறுத்திவிட்டன. பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், கலாச்சார அமைச்சகம் மற்றும் இரண்டு பெரிய வங்கிகளின் இணையதளங்கள் இதில் அடங்கும். தாக்குதல்கள் அண்டை நாடுகளில் இருந்து வருவதாக உக்ரேனிய அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர் மூளுமா; வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எச்சரிக்கை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR