டெக்னாலஜியின் வளர்ச்சி காரணமாக இத்துறையில் சிறந்து விளங்குவோர் குறைந்த காலகட்டத்திலேயே மிகப்பெரிய அளவில் பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பை பெற்று வருகின்றனர். இதற்கு இந்தியாவில் வெற்றிபெற்றுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர்களே சான்று.
ஆனால் 10 வருடத்திற்கு முன்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் கிடையாது, மிகப்பெரிய டெக்னாலஜி விழிப்புணர்வும் இல்லாத காலத்தில் 17 வயது சிறுவன் மொபைல், வெப்சைட் உருவாக்குவதன் மூலம் மில்லியன் டாலரை சம்பாதித்து இப்போது பில்லியன் டாலர் அளவில் சம்பாதிக்கத் தயாராகியுள்ளார்.
மோடியின் ஒரேயொரு உத்தரவு.. 16 பில்லியன் டாலர் நஷ்டம்.. அழுது புலம்பும் #FreeFire..!
இவான் சிங் லூத்ரா
டெல்லியை தேர்ந்த இவான் சிங் லூத்ரா 12 வயதாக இருக்கும் போது தனது தந்தையின் கால் சென்டரில் கம்ப்யூட்டரை பார்த்து வியந்துபோனார். அதன் பின்பு 12 வயதில் கம்ப்யூட்டரை விளையாட்டுப் பொருளாதாரப் பார்ப்பதைத் தாண்டி கம்ப்யூட்டர் கோடிங்-ஐ கற்றுக்கொள்ள இவான் சிங் லூத்ரா-வை துண்டியது.
மொபைல் ஆப், வெப்சைட்
இதைத் தொடர்ந்து 15 வயதுக்குள் மொபைல் ஆப், வெப்சைட் போன்றவற்றைச் சொந்தமாக உருவாக்கி லாபத்திற்காக விற்பனை செய்யத் துவங்கினார் இவான் சிங் லூத்ரா, 15வயதிற்குள் அவருடைய ஆப்களைப் பல மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்த துவங்கினர்.
ஸ்டீவ் ஜாப்ஸ்
குறிப்பாக இந்தியாவைத் தாண்டி வெளிநாட்டில் இருக்கும் மக்களும் பயன்படுத்த துவங்கியதால் இவான் சிங் லூத்ரா ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் கண்ணில் பட்டார் இவான் சிங் லூத்ரா.
ஆப்பிள் ஆப் ஸ்டோர்
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த காலத்தில் ஆப்பிள் ஆப் ஸ்டோர் குறித்து ஆலோசனை பெற உலகம் முழுவதிலும் இருந்து முக்கியமானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, இதில் இவான் சிங் லூத்ரா-வும் ஒருவர் ஆவார்.
ஆலோசனை, அறிவுரை
15 வயதில் ஸ்டீவ் ஜாப்ஸ் உடன் நேரடியாக விவாதம் செய்து பல அறிவுரைகளை ஆப்பிள் ஆப் ஸ்டோர்-க்காக வழங்கியுள்ளார், அதேபோல் ஒரு மொபைல் ஆப் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் அறிவுரை பெற்றுள்ளதாக இவான் சிங் லூத்ரா இன்றும் பெருமையுடன் பேசுகிறார்.
17 வயதில் மில்லியனர்
2 வருடத்திற்குப் பின் பெரிய நிறுவனத்தில் பணியில் சேர்ந்த காரணத்தால் தான் உருவாக்கிய 30 மொபைல் ஆப்களையும், பல மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ததன் மூலம் 17 வயதில் மில்லியனர் ஆனார் இவான் சிங் லூத்ரா.
30 வயதில் பில்லியனர்
17 வயதில் பெற்ற பணத்தையும் அனுபவத்தையும் பல வகையில் பயன்படுத்தித் தற்போது 300க்கும் அதிகமான நிறுவனத்தை உருவாக்கி, முதலீடு செய்து உள்ளார். இதன் மூலம் தற்போது 27 வயதாகும் இவான் சிங் லூத்ரா தனது 30 வயதில் பில்லியனர் என்ற நிலையை அடைவேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு பில்லியன் டாலர் என்றால் 7400 கோடி ரூபாய்.
ஹெலிகாப்டர்
யூடியூப் மூலம் கம்ப்யூட்டர் கோடிங் கற்றுக்கொண்டு 17 வயதில் மில்லியனரான இவான் சிங் லூத்ரா கப்பலில் பார்டி, ஆடம்பர சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார், விரைவில் ஹெலிகாப்டர் வாங்க உள்ளதாகக் கூறியுள்ளார் இவான் சிங்.
நாடு நாடாகப் பயணம்
மேலும் இவான் சிங் லூத்ரா தற்போது இந்தியா, மெக்ஸிகோ, டொமினிகன் குடியரசு மற்றும் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய பகுதிகளில் மாறி மாறி வசித்து வருகிறார்.
கிரிப்டோகரன்சி
இவான் சிங் தற்போது தனது பணத்தில் பெரும் பகுதி முதலீட்டை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து வருகிறார், சமீபத்தில் 2.2 பில்லியன் பவுன்ட் தொகைக்கு நியூ ரோலெக்ஸ் என்னும் NFT-ஐ வாங்கியுள்ளார்.
ஜீரோ டூ ஹீரோ
இவான் சிங் நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்தாலும் தற்போது டெக்னாலஜி கொடுத்த சுதந்திரம், வாய்ப்புகள் மூலம் ஆடம்பரமான கலக்கல் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
Delhi boy Evan Singh Luthra who met steve jobs at 17 set to become billionaire by 30
Delhi boy Evan Singh Luthra who met steve jobs at 17 set to become billionaire by 30 17 வயதில் மில்லியனர், 30 வயதில் பில்லியனர்.. வியக்கவைக்கும் டெல்லி இவான் சிங்-ன் வளர்ச்சி..!