நெருக்கடியான சூழ்நிலையின் போது இந்தியா வழங்கிய ஒத்துழைப்பை வரவேற்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், இந்திய எரிபொருள் நிறுவனத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல், கொழும்பை நேற்று (15) வந்தடைந்தது.
கப்பலை வரவேற்க எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சென்றிருந்த போதே அமைச்சர் உதய கம்மன்பில ஊடகவியலாளர் மத்தியில் இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் கலந்துகொண்டார்.இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா பொறுப்புடன் செயற்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அங்கு தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கொள்வனவிற்காக 500 அமெரிக்க மில்லியன் டொலரை இந்தியாஇ இலங்கைக்கு வழங்கவுள்ளது.