உலக நாடுகளைப் பயமுறுத்தி வந்த ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை நாளுக்கு நாள் பெரிய அளவில் வெடித்த நிலையில், அமெரிக்கா- ரஷ்யா மத்தியில் இருக்கும் நட்புறவில் பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டு இருக்கும் வேளையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மேகத்திய நாடுகள் உடன் பேச்சுவார்த்தைக்குத் தயாரானார்.
2 நாளில் ரூ.12 லட்சம் கோடி காலி.. பாதாளம் நோக்கி சென்ற சென்செக்ஸ்.. இன்று நிலவரம் என்ன?
விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்யா, சீனா மற்றும் பல நாடுகள் உதவியுடன் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் போர் செய்யத் தயாராக இருந்த நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு மிகப்பெரிய திருப்பு முனையாக உள்ளது.
ரஷ்யா – உக்ரைன்
நேற்று மாலை ரஷ்யா, உக்ரைன் எல்லையில் இருந்து சில குறிப்பிட்ட படைகளைத் திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நொடியில் இருந்து ஐரோப்பிய பங்குச்சந்தை சிறப்பான வர்த்தக உயர்வை பதிவு செய்தது. இதன் எதிரொலியாக இந்தியா, அமெரிக்கப் பங்குச்சந்தையும் சிறப்பான உயர்வை பதிவு செய்தது.
ஜெர்மனி ஓலாஃப் ஷோல்ஸ்
உக்ரைன் எல்லையில் இருந்து படைகள் திரும்பப் பெற்ற உடன், விளாடிமிர் புதின் பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவித்த அடுத்தச் சில மணிநேரத்தில் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளின் சார்பாக ஜெர்மனி நாட்டின் அதிபரான ஓலாஃப் ஷோல்ஸ், ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்றார். ஷோல்ஸின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது, பதிலுக்குப் பதில் அடிப்பது என்பது தான்.
கிரிமியா ராணுவ ஒத்திகை
இந்நிலையில் இன்று ரஷ்ய பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவில் இராணுவ ஒத்திகைகள் முடிவடைந்துவிட்டதாகவும், ராணுவ வீரர்கள் தங்களின் நிலையான பணியிடத்திற்குத் திரும்பி வருவதாகவும் ரஷ்யா புதன்கிழமை கூறியுள்ளது. இது எல்லையில் சில படைகள் வெளியேறியதாக அறிவித்த ஒரு நாளுக்குப் பின்பு அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச்சந்தை
இதன் எதிரொலியாக இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தைத் துவங்கிய ஐரோப்பிய சந்தை அனைத்தும் உயர்வுடன் காணப்படுகிறது. இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தை 100 புள்ளிகள் வரைவிலான உயர்விலும், சரிவிலும் தவித்த நிலையில் சென்செக்ஸ் 300 புள்ளிகளைத் தாண்டியுள்ளது. வங்கி, ஆட்டோமொபைல், ஐடி, பார்மா துறை பங்குகளை உயர்வுடன் உள்ளது.
Russia says Crimea military drills ended, troops back to garrison, Sensex 300 pts up
Russia says Crimea military drills ended, troops back to garrison, Sensex 300 pts up ரஷ்யா சொன்ன குட் நியூஸ்.. உக்ரைன் நம்மதி.. பங்குச்சந்தை உயர்வு..!