தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் அரியவகை விலங்கினம் ஈன்ற கன்று!



தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள அருகி வரும் விலங்கினமான அரேபிய ஒரிக்ஸ் (Arabian oryx), கன்று ஒன்றை ஈன்றுள்ளது.

இந்த அரேபிய ஒரிக்ஸ் கன்று ஆரோக்கியத்துடன் இருப்பதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த புதிய குட்டி தனது தாயுடன் பொது மக்கள் பார்வைக்காக விலங்குகள் சரணாலயத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பாலைவன பாலூட்டிகளான அரேபிய ஒரிக்ஸ்கள், அரேபிய பாலைவனத்திற்கு உரித்தானவையாகும். அங்கு சுமார் 1,000 அரேபிய ஒரிக்ஸ் மட்டுமே வசித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களில் சுமார் 7,000 அரேபிய ஒரிக்ஸ்கள் உள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போது இலங்கையில் வசிக்கும் அரேபிய ஒரிக்ஸ்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே உள்ளது.

அவை இலங்கையில் உள்ள உயிரியல் பூங்காக்கள் மற்றும் சஃபாரி பூங்காக்களில் வசித்துவருகின்றன. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.