ரியல்மி நிறுவனத்தின் புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பட்ஜெட் போன்களை விற்பனைக்குக் கொண்டு வரும் ரியல்மி நிறுவனம், இம்முறையும் ரூ.20,000க்கும் கீழ் தனது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இன்று ரியல்மி தரப்பில் இருந்து ரியல்மி 9 ப்ரோ (
Realme 9 Pro 5G
), ரியல்மி 9 ப்ரோ பிளஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
அதில் ரியல்மி 9 ப்ரோ ஸ்மார்ட்போன், ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட், 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட எல்சிடி டிஸ்ப்ளே, 64 மெகாபிக்சல் முதனமை கேமரா, 8ஜிபி ரேம் மெமரி ஆகிய அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
Poco M4 Pro 5G: டர்போ ரேம், புதிய டைமென்சிட்டி 810 சிப்செட், 50MP ஷார்ப் கேமரா – விலை என்ன தெரியுமா?
ரியல்மி 9 ப்ரோ அம்சங்கள்
டிஸ்ப்ளே விஷயத்தில் பயனர்களை ரியல்மி ஏமாற்றியுள்ளது. தங்களின் தளத்திலே 120Hz ரெப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், அது அமொலெட் பேனலா அல்லது எல்சிடி பேனலா என்று தெளிவாக குறிப்பிடவில்லை. ரியல்மி எல்சிடி டிஸ்ப்ளே உடன் ஸ்மார்ட்போனை வெளியிட்டுவிட்டு, 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்டு மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. இதில் 6.6″ முழு அளவு எச்டி+ எல்சிடி திரை கொடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பானது என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ரியல்மி யுஐ 3.0 ஸ்கின் கொண்டு இயங்குகிறது. தற்போது வெளியான பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின், ரியல்மி நிறுவனம் மட்டும் தான் ஆண்ட்ராய்டு 12 உடன் போனை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரியல்மி 9 ப்ரோ ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் உதவியுடன் இயக்கப்படுகிறது. கிராபிக்ஸ் பயன்பாட்டுக்காக அட்ரினோ 619 கிராபிக்ஸ் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Sell Old Phone: பழைய போனுக்கு நல்ல விலை வேண்டுமா… கவலைய விடுங்க!
ரியல்மி 9 ப்ரோ கேமரா
இதில் 64 மெகாபிக்சல் நைட்ஸ்கேப் கேமரா முதன்மை சென்சாராக செயல்படுகிறது. இதனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை கொண்ட டிரிப்பிள் கேமரா அமைப்பைப் பின்பக்கத்தில் கொண்டுள்ளது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா உதவியுடன் 720 பிக்சல் திறனில் வீடியோ பதிவு செய்ய முடியும்
மேலும், 6ஜிபி, 8 ஜிபி ரேம் தேர்வுகளின் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. உள்ளடக்க மெமரியாக 128ஜிபி கொடுக்கப்பட்டுள்ளது. இது புதிய UFS2.2 வெர்ஷன் மெமரியைக் கொண்டதாக இருக்கிறது. இரட்டை 5ஜி ஆதரவை இந்த ரியல்மி 9 ப்ரோ ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது.
Infinix zero 5g: முதல் 5ஜி போனில் இன்பினிக்ஸ் சொதப்பியது என்ன?
ரியல்மி 9 ப்ரோ பேட்டரி
பேட்டரி திறனைப் பொருத்தவரை 5000 mAh திறனுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. இதனை ஊக்குவிக்க 33W டார்ட் சார்ஜிங் ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. லேட்டஸ்ட் டைப்-சி சார்ஜிங் போர்ட் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப் ஆகிய சென்சார்கள் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. வைஃபை (5GHz), ப்ளூடூத் 5.1 ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், 3.5mm ஜாக் ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் இந்த ரியல்மி போன் பெறுகிறது.
Redmi Smart Band Pro: அடேங்கப்பா… இவ்ளோ ஸ்பெஷலா இந்த ஸ்மார்ட் பேண்ட்… விலை என்னவா இருக்கும்?
ரியல்மி 9 ப்ரோ விலை
இந்த ஸ்மார்ட்போன் Sunrise Blue, Aurora Green, Midnight Black ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.17,949 ஆகவும், 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.20,949 ஆகவும் உள்ளது.
Redmi Note 11S: 108 MP கேமரா, AMOLED திரை, Stereo ஸ்பீக்கர்ஸ்… விருந்து படைத்த சியோமி!