புதுடில்லி:’ஜெட் எரிபொருள் அல்லது ஏ.டி.எப்.,’ என அழைக்கப்படும், விமான எரிபொருள் விலை, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. இதையடுத்து, விமான கட்டணங்கள் உயர வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், கடந்த இரண்டு மாதங்களுக்குள்ளாக, நான்கு முறை விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.ஒரு கிலோ லிட்டருக்கு, கிட்டத்தட்ட 5.2 சதவீதம், அதாவது 4,482 ரூபாய் அதிகரித்து, 90 ஆயிரத்து 520 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுவரை இந்த அளவுக்கு விலை அதிகரித்தது இல்லை. இந்திய வரலாற்றில் இது தான் மிக அதிகம்.கடந்த நான்கு முறையில், 1 கிலோ லிட்டருக்கு மொத்தம் 16 ஆயிரத்து, 497 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சர்வதேச சராசரி விலையின் அடிப்படையில், விமான எரிபொருள் விலை, ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மாற்றியமைக்கப்படுகிறது. இந்த விலை உயர்வு, விமான சேவை நிறுவனங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும் எனக் கருதப்படுகிறது.
புதுடில்லி:’ஜெட் எரிபொருள் அல்லது ஏ.டி.எப்.,’ என அழைக்கப்படும், விமான எரிபொருள் விலை, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. இதையடுத்து, விமான கட்டணங்கள் உயர வாய்ப்பிருப்பதாக
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.