பொதுவாக ஒரு குடும்பத்தில் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது என்றாலே அந்த குடும்பத்தினர், தங்க நகைகள், ஆபரணங்கள், பிக்சட் டெபாசிட் என குழந்தையின் இளம் வயதிலேயே செய்து வைப்பர், வாங்கி வைப்பார்கள்.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அப்படி இல்லை. பல்வேறு வகையான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு என சில அஞ்சலக திட்டங்கள் உள்ளன. எனினும் பெண் குழந்தைகளுக்கு என பிரத்யேகமான ஒரு திட்டம் மட்டும் தான் உள்ளது. அது சுகன்யா சம்ரிதி திட்டம் தான்.
மத்திய அரசின் ட்ரோன் இறக்குமதி தடை..இந்த 4 பங்குகளுக்கு கைகொடுக்கலாம்..!
இந்த திட்டத்தில் உள்ள ஒரு சலுகை என்னவெனில் பிறந்த குழந்தையின் பெயரில் கூட இந்த கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம்.
தற்போதைய வட்டி விகிதம்
இந்த திட்டத்தின் படி வட்டி விகிதம் 7.6% ஆகும். இந்த திட்டத்தில் இன்னும் பல சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பங்கு சந்தை அபாயம் இல்லை என்பதால், முதலீட்டுக்கு பங்கமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுக்கிறது. இது பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு உதவியாக இருக்கும். ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைக்கு மட்டுமே இந்த கணக்கினை தொடங்க முடியும்.
எப்படி தொடங்குவது?
பொதுவாக இந்த சுகன்யா சம்ரிதி திட்டத்தினை நேரடியாக அஞ்சலகத்திற்கு சென்று தொடங்கிக் கொள்ளலாம். இதனை ஆன்லைனிலும் தொடங்கிக் கொள்ளும் வசதி உண்டு. இதற்காக குழந்தையின் பிறப்பு சான்றிதழ் விவரங்கள், பெற்றோரின் அடையாள ஆவணங்கள், பான் எண் என பல விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும். இதனை கொடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு, அதனை சம்பந்தபட்ட அஞ்சல் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
முக்கிய அம்சங்கள்
ஹெச்.டி.எஃப்.சி வங்கியிலும் இந்த சேமிப்பு திட்டத்தினை தொடங்கிக் கொள்ள முடியும். இதில் குறைந்தபட்சம் 250 ரூபாயும், அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாயும் டெபாசிட் செய்து கொள்ளலாம். இந்த கணக்கினை பெண் குழந்தையின் 10 வயது வரையில் தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் அல்லது 18 வயதுக்கு மேல் எப்போது திருமணம் ஆகிறதோ அப்போது முதிர்வடைகிறது. இதனை இடையில் பெண் குழந்தையின் உயர் கல்விக்காக பகுதி தொகையினை எடுத்துக் கொள்ள முடியும்.
என்னென்ன ஆவணங்கள்?
ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் இந்த கணக்கினை தொடங்க என்னென்ன ஆவணங்கள் தேவை. இதற்காக எஸ்.எஸ்.ஓய் பார்ம், பிறப்பு சான்றிதழ், முகவரி ஆவணம், காப்பாளர் அல்லது பெற்றோரின் ஆவணங்கள் தேவை. இதனுடன் அடையாள சான்றும் தேவைப்படும்.
எப்படி?
SSY- பார்மினை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான ஆவணங்கள், போட்டோவையும் இணைத்துக் கொடுக்கலாம். அதன் பிறகு டெபாசிட் தொகை 250 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய், உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப டெபாசிட் செய்து கொள்ளலாம். உங்களது நெட் பேங்கிங்கில் இருந்து நேரடியாக பணம் மாத மாதம் செலுத்தும் படியும் செய்து கொள்ளலாம். இதனை நேரிடையாக வங்கியில் சென்றும் தொடங்கிக் கொள்ளலாம்.
ஆன்லைனில் எப்படி?
ஆன்லைனில் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் இணைய வங்கியினை லாகின் செய்து கொள்ளுங்கள்.
அதில் fund Transfer your PPF or SSY accounts என்பதை கிளிக் செய்யுங்கள். அதனை கிளிக் செய்து Continue என்பதை கொடுங்கள்.
இதனை மற்றொரு பக்கத்தில் தொடங்கும். அதில் எந்த கணக்கில் இருந்து பணம் செலுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அதனை கொடுத்த பிறகு எவ்வளவு தொகை என்பதை கொடுக்க வேண்டும். அதன் பிறகு Continue என்பதை கொடுங்கள். இது அடுத்த பக்கத்தில் தொடங்கும். அதன் பிறகும் Continue என்பதை கொடுங்கள்.
இதன் பிறகு உங்களது SSY கணக்கானது ஓபன் ஆகி விடும். அதன் பிறகு அது உங்களது சேமிப்பு கணக்கு கீழாகவே இருக்கும். அதில் எவ்வளவு பணம் செலுத்தியுள்ளீர்கள் என்ற விவரங்கள் இருக்கும்.
How to open sukanya samridhi yojana account with hdfc bank?
How to open sukanya samridhi yojana account with hdfc bank?/பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி யோஜனா.. HDFC வங்கியில் எப்படி தொடங்குவது?