திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசின் சாலைத்திட்டங்கள் அனைத்தும் முடங்கின; திமுக ஆட்சியில் உள்ளவரை மக்கள் மன நிறைவு அடையமாட்டார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வனவாசி பேரூராட்சி பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “செய்யப்போவதில்லை என்பதால் சாத்தியமில்லாத வாக்குறுதிகளை திமுகவினர் அளித்தனர் என்றார்.
நீட் தேர்வு தொடர்பான விவாதித்தில் மக்கள் நீதிபதியாக இருந்து பதில் சொல்லட்டும் என்றேன்; இதுவரை ஸ்டாலின் தரப்பிலுருந்து எந்த பதிலும் வரவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை ஜெயலலிதா அமல்படுத்த சொல்லி அப்போதய காங்கிரஸ் அரசிடம் வலியுறுத்தினார். ஆனால், காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உத்தரவு பெறப்பட்டது என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசின் சாலைத்திட்டங்கள் அனைத்தும் முடங்கியதாக குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிகாலத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மண் இலவசமாக வழங்கப்பட்டதாகவும், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு லோடு கிராவல் மண்ணுக்கு ரூபாய் 1000 விலை நிர்ணயம் செய்த காரணத்தால் புதிய திட்டங்கள், ஏற்கனவே விடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் முடங்கிப்போய்விட்டன என்றும் தெரிவித்தார்.
இனி ஆட்சிக்கு வரமுடியாது என்பதால் இருக்கும் வரை கொள்ளையடிக்கலாம் என ஸ்டாலின் முடிவு செய்துவிட்டதாகவும் குற்றசாட்டினார். நூல் விலையேற்றத்தால் ஜவுளித்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது.
திமுக ஆட்சியில் ஏற்படும் மின்வெட்டால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் உள்ளவரை மக்கள் மன நிறைவு அடையமாட்டார்கள் என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM