இந்தியாவில் டிஜிட்டல் மற்றும் ஈகாமர்ஸ் வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அனைத்து ஷாட் வீடியோ செயலிகளும் ரீடைல் நிறுவனத்திடம் இணைந்து சோஷியல் காமர்ஸ் வர்த்தகத்தைத் துவங்கி வருகிறது.
ஆம், சீனாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சோஷியல் காமர்ஸ் வர்த்தகத்தை இந்தியாவில் கொண்டு வர முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட அனைத்து ஆன்லைன் விற்பனை நிறுவனங்களும் முயற்சி செய்து வருகிறது.
சந்திரசேகரன் கைக்கு வரும் 3 புதிய நிறுவனங்கள்.. அரசு ஓகே சொல்லுமா.. காத்திருக்கும் டாடா..!
இந்திய ஈகாமர்ஸ் வர்த்தகத்தின் அடுத்தப் பிரம்மாண்ட மாற்றம் இதுதான்.
சீனா
சீனாவில் லைவ் வீடியோ மூலம் அதிகத் தள்ளுபடிகள் உடன் பிரபலங்கள் உடன் இணைந்து விற்பனை செய்யப்பட்டும் சோஷியல் காமர்ஸ் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல், தற்போது சீன ஈகாமர்ஸ் சந்தையில் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.
ரிலையன்ஸ் ரீடைல்
இந்தப் பிரம்மாண்டத்தை இந்தியாவிலும் கொண்டு வரும் முயற்சியில் இந்த வாரம் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ரீடைல் இன்மொபி நிறுவனத்தின் டிஜிட்டல் சேவை பிரிவான கிளான்ஸ் நிறுவனத்தில் 200 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்தது.
ரோபோசோ – ரிலையன்ஸ் ரீடைல்
இந்நிலையில் கிளான்ஸ் நிறுவனம் கைப்பற்றிய ஷாட் வீடியோ மற்றும் பொழுதுபோக்கு சேவை நிறுவனமான ரோபோசோ, ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்துடன் இணைந்து சோஷியல் காமர்ஸ் சேவையை அளிப்பதற்காக ஆலோசனை செய்து வருகிறது. இதை இன்மொபி நிறுவனத்தின் தலைவரான நவீன் திவாரி உறுதி செய்தார்.
வால்மார்ட், பிளிப்கார்ட்
இதேபோல் வால்மார்ட், டிக்டாக் நிறுவனம் சோஷியல் காமர்ஸ் வர்த்தகத்திற்காகக் கூட்டணி வைத்துள்ளது. இந்தியாவில் முன்னணி ஈகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட், ஷார்சேட்-ன் மோஜ் உடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் இனி லைவ் காமர்ஸ் அல்லது சோஷியல் காமர்ஸ் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Reliance Retail entering into Social live commerce with Glance’s Roposo
Reliance Retail entering into Social live commerce with Glance’s Roposo சீனா-வை காப்பி அடிக்கும் முகேஷ் அம்பானி.. ரோபோசோ உடன் ரீலையன்ஸ் கூட்டணி..!