நிறுவனங்களின் இயக்குனர் குழுவில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவிகளை வகிக்க கூடாது. அவற்றை தனித் தனியாக பிரிக்க வேண்டும் என பங்கு சந்தை அமைப்பான செபி முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விதியை பிறப்பித்தது.
இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1, 2022 முதல் அமலுக்கு வரவிருந்தன. இந்த நிலையில் செபி நிறுவனங்கள் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்களை நியமித்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
முன்னதாக இந்த இரு பதவிகளையும் ஒருவரே வகிக்க கூடாது. தனித் தனியாக பிரிக்க வேண்டும். இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1 2022 முதல் அமலுக்கு வரவிருந்தன.
17 வயதில் மில்லியனர், 30 வயதில் பில்லியனர்.. வியக்கவைக்கும் டெல்லி இவான் சிங்-ன் வளர்ச்சி..!
முந்தைய அறிவிப்பு
இதற்கிடையில் தான் சந்தை மதிப்பில் முதல் 500 இடங்களை வகிக்கும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட பதவிகளை தனித் தனியாக பிரிக்க வேண்டும். அவர்களது பணியையும் பிரிக்க வேண்டும் என செபி அறிவித்திருந்தது. இது அமலுக்கு வர இன்னும் சிறிது காலமே உள்ள நிலையில், செபியின் இந்த அறிவிப்பானது பெரும் நிம்மதியினை கொடுத்துள்ளது எனலாம்.
150 நிறுவனங்கள் பலன்
செபியின் இந்த அறிப்புகளுக்கு பல நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்மாறான பல கருத்துகள் நிலவி வந்தன. இதற்கிடையில் செபியின் தற்போதைய தளர்வால் 150 நிறுவனங்கள் பலனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவைகளில் தற்போதும் கூட நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆகிய இரு பதவிகளையும் ஒருவரே வகித்து வருகின்றனர்.
தவறாக பயன்படுத்தலாம்
இது கார்ப்பரேட் நிறுவனங்களின் தரவுகளையும் பாதுகாக்க உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனெனில் சம்பந்தமே இல்லாத மூன்றாம் நபர் நிறுவனத்திற்குள் முக்கிய தலைமை பதவிகளில் இருக்கும்போது நிறுவனத்தினை பற்றிய முழு தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அவர்கள் நிறுவனத்தினை விட்டு வெளியே சென்ற பிறகு, அதனை தவறாக பயன்படுத்தக் கூடும். ஆக இது நிறுவனங்களுக்கு ஏற்ற ஒரு அறிவிப்பு தான் என கூறுகின்றனர்.
யாரெல்லாம் பயன்
செபியின் இந்த அறிவிப்பு காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (முகேஷ் அம்பானி), ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (சஞ்சீவ் மேக்தா), பஜாஜ் பின்செர்வ் (சஞ்சீவ் பஜாஜ்), ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல் (சஜ்ஜன் ஜிண்டால்), அதானி போர்ட்ஸ் (கெளதம் அதானி), கோத்ரேஜ் கன்சியூமர் ( நிசாபா கோத்ரேஜ்) உள்ளிட்ட பல நிறுவனங்களும் பலனடையக் கூடும்.
நிறுவனங்கள் தயக்கம்
கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும் இந்த விதிமுறைகளை அமல்படுத்த தயக்கம் காட்டி வந்த நிலையில், தற்போது மிகப்பெரிய ரிலீஃப்பினை கொடுக்கலாம். இந்த விதிமுறைகள் 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. முன்னதாக மார்ச் 2018ல் அங்கீகரிக்கப்பட்டது. அதன் பிறகு ஏப்ரல் 2020 வரையில் கால அவகாசம் வழங்கியது. ஆனால் அதன் பிறகு கொரோனா காரணமாக ஏப்ரல் 2022ல் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
நிர்மலா சீதாராமன்
இம்மாத தொடக்கத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், செபியின் இந்த விதிமுறை குறித்து நிறுவனங்கள் கவலை தெரிவிப்பதை சுட்டிக் காட்டி, அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தினார். இதற்கிடையில் தான் செபியின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
india Inc gets a breather as SEBI makes separation of Chairman, MD posts voluntary for listed companies
India Inc gets a breather as SEBI makes separation of Chairman, MD posts voluntary for listed companies/கார்ப்பரேட்டுகளுக்கு மிகப்பெரிய ரிலீஃப்.. தலைவர், MD, CEO பதவிகள் விருப்பத்தின் பேரில் நியமிக்கலாம்!