குட் நியூஸ்: பிக்சட் டெபாசிட் வட்டியை 2வது முறை உயர்த்தியது ஹெச்டிஎப்சி வங்கி..!

இந்திய ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் நாட்டின் வளர்ச்சிக்குக் கொள்கை அடிப்படையிலான தளர்வுகள் தேவையை என்பதைச் சுட்டிக்காட்டி ரெப்போ விகிதம் உட்பட அனைத்து வட்டி விகிதத்திலும் மாற்றங்களை அறிவிக்காமல் பழைய வட்டி விகிதத்தையே 10வது முறையாக அமலாக்கம் செய்துள்ளது.

இதனால் வங்கிகளில் கடன், வைப்பு நிதியில் எவ்விதமான மாற்றமும் இருக்காது என் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு பொதுத்துறை வங்கிகளைத் தொடர்ந்து நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியாகத் திகழும் ஹெச்டிஎப்சி வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

ஜனவரி 2022 முதல் அமல்.. ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி முக்கிய அறிவிப்பு..!

 நடுத்தர மக்கள்

நடுத்தர மக்கள்

இந்தியாவில் இருக்கும் அதிகப்படியான நடுத்தர மக்கள் மத்தியில் பாதுகாப்பான முதலீடு என்றாலே வங்கி வைப்பு நிதி தான் நம்பப்படுகிறது. இந்த நிலையில் வைப்பு நிதியில் அறிவிக்கப்படும் வட்டி விகித மாற்றங்கள் ஒரு வங்கியின் நிதி நிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

 வரிச் சேமிப்பு

வரிச் சேமிப்பு

நடுத்தர மக்கள் மட்டும் அல்லாமல் வரி சேமிப்புக்காக நீண்ட கால அடிப்படையில் வைப்பு நிதியியல் முதலீடு செய்யும் பணக்காரர்கள் இருக்கும் நிலையில் ஹெச்டிஎப்சி வங்கி வைப்பு நிதிக்காக உயர்த்தியுள்ள வட்டி விகிதம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.

 ஹெச்டிஎப்சி வங்கி
 

ஹெச்டிஎப்சி வங்கி

ஹெச்டிஎப்சி வங்கி தற்போது 2 கோடி ரூபாய்க்குக் குறைவான வைப்பு நிதி கொண்ட திட்டத்திற்கு 2வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. மேலும் தற்போது உயர்த்தப்பட்டு உள்ள அல்லது மறு சீரமைப்புச் செய்யப்பட்ட வட்டி விகிதம் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளது.

 வட்டி விகித மாற்றங்கள்

வட்டி விகித மாற்றங்கள்

இந்நிலையில் ஹெச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ள புதிய வட்டி விகிதங்களின் முழு விபரம்

  • 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை – 2.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.00 சதவீதம்
  • 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை – 2.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.00 சதவீதம்
  • 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை – 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.50 சதவீதம்
  • 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை – 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.50 சதவீதம்
  • 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை – 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.50 சதவீதம்
  • 91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை – 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.00 சதவீதம்
  • 6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரை – 4.40 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.90 சதவீதம்
  • 9 மாதங்கள் 1 நாள் முதல் ஒரு வருடம் வரை – 4.40 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.90 சதவீதம்
  • 1 ஆண்டு – 5.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.50 சதவீதம்
  • 1 வருடம் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரை – 5.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.50 சதவீதம்
  • 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை – 5.20 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.70 சதவீதம்
  • 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை – 5.45 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.95 சதவீதம்
  • 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை – 5.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 6.35 சதவீதம்

 சென்டரல் பேங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி

சென்டரல் பேங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி

கடந்த வாரம் ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்ட முடிவுகளை அறிவித்த அடுத்த நாளிலேயே, சென்டரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் யூகோ வங்கி 2 கோடி ரூபாய்க்கும் குறைவான வைப்பு நிதிக்கான வட்டியைத் திருத்தி அறிவித்துள்ளது. இதனால் மக்கள் பிற வங்கிகளும் இதுபோன்று அறிவிக்குமா என்று அச்சத்தில் இருந்த நிலையில் ஹெச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Good News: HDFC Bank Hikes Fixed Deposit Interest Rates, Check latest FD Interest Rates before investing

Good News: HDFC Bank Hikes Fixed Deposit Interest Rates, Check latest FD Interest Rates before investing குட் நியூஸ்: பிக்சட் டெபாசிட் வட்டியை 2வது முறை உயர்த்தியது ஹெச்டிஎப்சி வங்கி..!

Story first published: Thursday, February 17, 2022, 11:01 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.