ஓட்டுக்காக டாஸ்மாக்ல நின்னு சரக்கு விக்காத குறைதான்!- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 16-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக, ‘டீக்கடை முதல் கறிக்கடை வரை… நாடகமாகும் பரப்புரை களம்; நடிகர்களாகும் வேட்பாளர்கள்! உங்கள் கருத்து என்ன?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.
Advice Avvaiyar
முன்பு போல் இல்லாமல், புதிது புதிதாக நாடக மேடை போல மாறி விட்ட தேர்தல் களம், பார்த்து ரசிக்க முடியுமே தவிர என்ன பலன்? தேர்வாகி வந்த பின் செய்யும் நல்லவைகளைச் சொன்னாலே போதுமே?மக்கள் தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.நல்லவர்கள் என்றும் நல்லதையே நினைத்து நல்லதே செய்வார்கள்.
FollowBabuMohamed
“நல்லவேளை… வேட்பாளர்கள்..
ஓட்டுக்காக…டாஸ்மாக்.. கடையில…நின்னு..சரக்கு..விக்காதகுறைதான் …!”.
image
Shivasankaran Arumugam
அரசியல்வாதிகள் நியாயமாக நடந்து கொண்டால் நடிகர்களாக மாற வேண்டிய அவசியம் கிடையாது.  தற்போது திமுக ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது… இந்த ஒன்பது மாதங்கள் சரியான முறையில், உண்மையில் சொன்ன படியும், மக்களுக்கான ஆட்சி செய்திருந்தால், இப்பொழுது ஓட்டு கேட்காமலே ,பரப்புரைக்கு தெருத்தெருவாக சுத்தாமல் வீட்டிலிருந்தபடியே ஜெயிக்கலாம்.. இப்படி ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு மற்ற கட்சிகளை குறை கூறி ஓட்டு கேட்க வேண்டிய அவல நிலை வந்திருக்காது…
இன்று கறிக்கடையிலும், டீ கடைகளுக்கும் சென்று மக்களோடு மக்களாக இருந்து ஓட்டு கேட்கும் அரசியல்வாதிகள், ஆட்சியில் இருக்கும்போது , தங்கள் கட்சிக்குள்ளேயே அடித்துக் கொள்ளாமல் , நியாயமான மக்களாட்சி செய்து இருந்திருந்தால் இந்நேரம் நீங்களே மக்கள் முதல்வராக இருந்திருக்கலாம்.
vinoth
Tea shop to parliament
its.me._vijay
மக்களை கவரவே இந்த நடிப்பு. சினிமா அரசியல் எப்போதே இந்தியாவில் வந்துவிட்டது. மக்களே! சிந்தித்து வாக்களிப்பீர் ……
priya.chandran
எதையாவது தூக்கி அடிக்கலாம் போல இருக்கு. எதுக்கு இந்த ஷோலாம்?
bbhuvi216
இது டிராமா மட்டும்தான். இப்படி பண்ண மக்கள் ஏமாந்துடுவாங்களா? எலக்‌ஷன் முடிஞ்சா மக்கள் அவஙக்ள போய் பாக்கக் கூட முடியாது. ஒரு ஹெல்ப்பும் பண்ணாம அலைய விடுவாங்க. யாருன்னே தெரியாதுன்னு சொல்லிடுவாங்க
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.