”உனக்கு ஆங்கரிங் வரலைப்பா… ஏதோ மிஸ் ஆகுது” என முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆக்கப்பட்டவர்தான் சிவகார்த்திகேயன். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் அவர்தான் டி.வி சூப்பர் ஸ்டார்.
டி.வி-யிலிருந்து சினிமாவுக்குள் வந்தார் சிவகார்த்திகேயன். ‘டி.வி முகங்களுக்கு சினிமாவில் கைதட்டல் விழாது’ என்பது கோலிவுட்டின் கப்ஸா கதைகளில் ஒன்று. அதனை காலி செய்தார் சிவா.
‘ஏகன்’ படத்தில் இவர் நடித்த பகுதிகள் எடிட்டிங்கில் வெட்டப்பட, ‘வேட்டை மன்னன்’ படம் வெளியாகாமல் போக, தமிழ் சினிமா பாண்டிராஜ் மூலமாக ‘மெரினா’ படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கி அழகு பார்த்தது.
”ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்” என்று ‘எதிர்நீச்சல்’ போட்ட சிவாவுக்கு, ஒவ்வொரு ஊரிலும் இருந்த வருத்தப்படாத வாலிபர் சங்கங்கள் ரசிகர் மன்றங்களாக மாறின.
நோ ஸ்டன்ட், நோ மாஸ், மினிமம் டான்ஸ் என்ற ஸோனில் இருந்த சிவாவுக்கு, ‘மான் கராத்தே’ கொஞ்சம் ஸ்டன்ட், நேர்த்தியான நடனம், கொஞ்சம் மாஸ் என அடுத்த லெவல் ஆட்டத்தைத் தொடங்கிவைத்தது. காக்கி சட்டை இவரின் மேக்ஸ் லெவல்.
‘சிவகார்த்திகேயனுக்கு அதிர்ஷ்டம்பா… ஈஸியா மேல வந்துட்டார்’ என்ற பேச்சுகள் கிளம்பிய நேரத்தில், ‘ரஜினிமுருகன்’ பாடலில் ‘தில்லா ஜெயிச்சாலும் லக்குங்கிறாய்ங்க… சிக்ஸர் அடிச்சாலும் டக்குங்கிறாய்ங்க…’ எனப் பதில் கொடுத்தார் சிவா.
சிவகார்த்திகேயன், எஸ்.கே. என்று ஆனது ரெமோவில். ‘ஒரே மாதிரி நடிக்கிறார்?’ என்ற விமர்சனம் எழ, அதற்கு ”அரைச்ச மாவையே அரைச்சாலும் அதுக்கும் வேணும் ஒரு திறமை…” என்று ‘சீமராஜா’ படப் பாடலில் பதில் இருந்தது.
இவ்வளவு காலம் ஜாலியான படத்தில் நடித்துக்கொண்டிருந்த சிவா, சமூக அக்கறையுள்ள ‘வேலைக்காரனா’க நடித்தது மட்டுமல்லாமல், விளம்பரப் படங்களில் நடிக்க மாட்டேன் என்ற முடிவையும் எடுத்தார்.
“இது ஒரு கேம்தான். ஒரு மேட்ச்ல அவுட்டாகி தோத்துட்டோம்னா, அந்த மேட்ச்தான் முடியுமே தவிர, லைஃப் முடியாது. அப்படித்தான் நான் நம்புறேன். தொடர்ந்து இன்னும் ஓடிக்கிட்டேதான் இருப்பேன்.” மிஸ்டர் லோக்கல் படம் சரியாக போகவில்லை என விமர்சனம் வந்தது.
‘நம்ம வீட்டுப் பிள்ளை’யாக சென்ட்டிமென்ட்டில் கரைய வைத்தார். “நம்மளை மாதிரி பசங்க ஒரு தடவை ஜெயிச்சா ஒத்துக்க மாட்டாய்ங்க.. ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும்… ஜெயிப்போம்” என ரியல் லைஃபை கனெக்ட் செய்யும் வசனம் படத்தில் இருக்கும்.
அருண்ராஜா காமராஜ் இயக்கிய ‘கனா’ படம், வாழ், டாக்டர் என தயாரிப்பாளராகவும் வெற்றிபெற்றார்.
‘கல்யாண வயசு தான்’ என்கிற கோலமாவு கோகிலா பாடலுக்கு பயங்கர ரெஸ்பான்ஸ். அதை தொடர்ந்து டாக்டர் செல்லம்மா, ஓ பேபி, தற்போது வெளியான அரபிக் குத்து என பாடலாசிரியராகவும் கலக்கி வருகிறார்.
நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் பாடல்களுக்கும் அவர்களின் கலாய் வீடியோக்களும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
கிரிக்கெட் விளையாடுவது இவரது ஃபேவரைட். ஜிம் போகவில்லை என்றால், நண்பர்களோடு ஃபுட்பால் விளையாடுவதுதான் வொர்க் அவுட். எஸ்.கே வுக்கு சினிமாவும் கிரிக்கெட் களம் தான்.
ஒவ்வொரு இன்னிங்ஸிலும் செஞ்சுரிகள் அடித்து அசத்த வாழ்த்துகள்! ஹேப்பி பர்த்டே எஸ்கே!