தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மும்பையிலுள்ள தேசிய பங்குச்சந்தையின் தலைமை அலுவகத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணன். அப்போது தேசிய பங்குச்சந்தையில் முறைகேடாக பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் மட்டுமன்றி coal allocation scam என்று சொல்லக்கூடிய பல இடைத்தரகர்கள் பயனடையும் வகையில் பங்குச்சந்தையின் விதிமுறைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, ஏற்கெனவே பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, சித்ரா ராமகிருஷ்ணனுக்கு அபராதம் விதித்தது.
மேலும் ஆனந்த் சுப்பிரமணியத்தை விதிகளை மீறி தலைமை செயல்பாட்டு அதிகாரியாக நியமித்ததாகவும் குற்றாச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தற்போது மும்பையிலுள்ள சித்ரா ராமகிருஷ்ணனின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊழல்களுக்கு பிண்ணனியில் இருந்தது யார்? மற்றும் யார் பரிந்துரையின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் பதவி மாற்றங்களை அவர் வழங்கினார் என்பது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.
மேலும் குறிப்பாக, சித்ரா ராமகிருஷ்ணன் இத்தனை ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட போதிலும், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர் ராஜினாமா செய்து எந்தவித பிரச்னையுமின்றி பங்குச்சந்தையைவிட்டு வெளியேற உதவியது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM