4 நாள் மட்டுமே வேலை, அதே சம்பளம்.. ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!

உலகளவில் ஊழியர்களின் வேலைத் திறனை மேம்படுத்தப் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மிகவும் டிரெண்டான விஷயம் இரண்டு. சீனாவில் பிரபலமாகி வரும் 996 முறை, மேற்கத்திய நாடுகளில் பரவி வரும் வாரத்தில் 4 நாள் மட்டுமே பணியாற்றும் கலாச்சாரம்.

இதில் வாரத்தில் 4 நாள் மட்டுமே பணியாற்றும் கலாச்சாரம் அதிகப்படியான நாடுகளில் பயன்படுத்தத் துவங்கிய நிலையில் பெல்ஜியம் நாட்டின் முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 இடத்தில் சோதனை..!

 பெல்ஜியம்

பெல்ஜியம்

பெல்ஜியம் நாட்டின் கடுமையான தொழிலாளர் சந்தையில் ஊழியர்களுக்குப் புதிய சுதந்திரம் கிடைத்துள்ளது. ஊழியர்கள் வழக்கமான ஐந்து நாட்களுக்குப் பதிலாக நான்கு நாட்களில் ஒரு வாரத்திற்கான முழு வேலையைச் செய்து முடிக்கும் சலுகையை அளித்துள்ளது பெல்ஜியம் அரசு. இதன் மூலம் ஊழியர்கள் எவ்விதமான சம்பளத்தையும் இழக்க நேரிடாத வகையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது முக்கியமானதாக உள்ளது.

 4 நாள் வேலை

4 நாள் வேலை

இதே வேளையில் ஊழியர்கள் இந்த 4 நாள் வேலை திட்ட சலுகையைப் பெற எழுத்துப்பூர்வமாக நிறுவனத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும், ஆனால் இதை நிராகரிக்க நிறுவனத்திற்கு உரிமை உண்டு எனவும் துணைப் பிரதமரும் தொழிலாளர் அமைச்சருமான Pierre-Yves Dermagne பிரஸ்ஸல்ஸில் தெரிவித்தார்.

 மாலை மற்றும் இரவு பணி
 

மாலை மற்றும் இரவு பணி

மேலும் இந்தப் புதிய மாற்றம் மூலம் பெல்ஜியம் நாட்டில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் எளிதாக மாலை மற்றும் இரவு பணியை அறிமுகம் செய்யலாம். இதற்கு அரசின் அனுமதியும் தேவையில்லை, இதேபோல் ஊழியரின் அனுமதியும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 அலெக்சாண்டர் டி குரூ

அலெக்சாண்டர் டி குரூ

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் செவ்வாய்க்கிழமை அந்நாட்டுப் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ கூறுகையில், மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் தங்கள் வேலை நேரத்தைச் சுதந்திரமாகத் திட்டமிட்டுக்கொள்ள அதிகச் சுதந்திரம் வழங்குவதே இந்த 4 நாள் வேலை நாள் திட்டத்தின் குறிக்கோள் எனத் தெரிவித்துள்ளார்.

சரி அது என்ன 996 வேலை திட்டம்..

சீனா

சீனா

சீனாவில் கடந்த சில வருடங்களாக இந்த 996 வேலைநேர கலாச்சாரம் பரவி வருகிறது. குறிப்பாக அலிபாபா நிறுவனம் இத்திட்டத்தை பெரிய அளவில் ஆதரித்ததன் மூலம் 996 கலாச்சாரம் பிரபலமாகி வருகிறது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வாரத்திலும் 6 நாட்களும் பணியாற்றும் முறை தான் 996 பணி கலாச்சாரம்.

 ஊழியர்கள் நலன்

ஊழியர்கள் நலன்

ஊழியர்களின் வொர்க் லைப் பேலென்ஸ்-ஐ சரிய செய்ய அல்லது மேம்படுத்த விரும்பும் நாடுகள் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தை எப்படித் திறம்பட அமலாக்கம் செய்வது எனத் திட்டமிட்டு வருகிறது. அதேநேரத்தில் நாட்டின் வளர்ச்சி, நிறுவனத்தின் வளர்ச்சி தான் முக்கியம் என நினைக்கும் சீனா போன்ற நிறுவனங்கள் 996 கலாச்சாரத்தை ஆதரித்து வருகிறது.

சரி உங்க நிறுவனத்தில் unoffical பணி நேரம் என்ன..? கமெண்ட் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Belgium govts allows employees 4 Day Work a Week without any salary cut but with condition

Belgium govts allows employees 4 Day Work a Week without any salary cut but with condition 4 நாள் மட்டுமே வேலை, அதே சம்பளம்.. ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!

Story first published: Thursday, February 17, 2022, 14:36 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.