உக்ரைன் உடனான பதற்றத்தை தணிக்க ஒத்துழைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிம் என ரஷ்யாவுக்கு ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா அதன் படைகளையும் ஆயுதங்களையும் குவித்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
ஆனால், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே, சமீபத்தில் உக்ரைன் எல்லைக்கு அருகே பயிற்சியில் ஈடுபட்ட அதன் சில படைகள் முகாமிற்கு திரும்பியுள்ளதாக ரஷ்யா அறிவித்தது.
இந்நிலையில், உக்ரைன் எல்லைக்கு அருகே இருந்து ரஷ்யா அதன் படைகளை திரும்பப் பெற்றதற்கன அந்த அறிகுறியும் தெரியவில்லை என ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் Christine Lambrecht தெரிவித்துள்ளார்.
பிரஸ்ஸல்ஸில் நடந்த நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்திற்கு வந்தபோது Christine Lambrecht இவ்வாறு தெரிவித்தார்.
உக்ரைனுடனான தனது எல்லையில் இருந்து ரஷ்யா தனது படைகளை வாபஸ் பெற்றதற்கான எந்த அறிகுறியும், அதற்காகத்தான் நாங்கள் காத்திருக்கிறோம்.
இதுவரை படைகள் திரும்பப் பெறுவது என்பது வெறும் வார்த்தைகளாக மட்டுமே உள்ளன, இன்னும் செயல்களில் எதுவும் நடக்கவில்லை.
அவர்கள் உடனடியாக அதை செயல்படுத்த வேண்டும். பதற்றத்தை தணிக்க ரஷ்யா ஒத்துழைக்க வேண்டும்.
இல்லையெனில், உண்மையில் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகள் சந்திக்க நேரிடும் என Christine Lambrecht எச்சரித்துள்ளார்.