உக்ரைன் உடன் பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க துணை தூதர் பார்ட்லே கோர்மனை ரஷ்யா நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளதாக RIA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் Jason Rebholz மேற்கோள் காட்டி RIA இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் (டிசிஎம்) பார்ட் கோர்மனை ரஷ்யா வெளியேற்றியது.
கோர்மன் மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தூதருக்குப் பிறகு இரண்டாவது மிக மூத்த அதிகாரி மற்றும் தூதரகத்தின் மூத்த தலைமையில் முக்கிய உறுப்பினராக இருந்தார்.
ரஷ்யாவில் இருந்து கோர்மனின் வெளியேற்றப்பட்டதை, பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக அமெரிக்கா கருதுகிறது, இதற்கு எதிர்விளையாற்ற தயாராகி வருகிறது என்று Rebholz கூறியதாக RIA மேற்கோள் காட்டியுள்ளது.
பார்ட்லே கோர்மன் வெளியேற்றப்பட்டதற்கு ரஷ்யா என்ன காரணம் தெரிவித்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை.