பொதுமக்கள் மகிழ்ச்சி : சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க புதிய எண் 1930

சென்னை

பொதுமக்கள் சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க காவல்துறையினர் 1930 என்னும் புதிய எண்ணை அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாளுக்கு நாள் தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றது.  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவுப்படி அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல மாற்றங்களைச் செய்து வருகிறது.  தற்போது தமிழகம் முழுவதும் சைபர்காவல் நிலையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் வங்கி மோசடி, இணையதள குற்றங்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஏற்கனவே சைபர் கிரைம் காவல்துறையினர் அவசர தொடர்பு எண்ணாக 155260 அறிவித்திருந்தனர்.  இதன் மூலம் சைபர் குற்றங்கள் குறித்த புகார் அளிக்கப்பட்டு வருகிறது.   தற்போது சைபர் குற்றங்கள் மேலும் அதிகரித்து வருவதால் சைபர் கிரைம் காவல்துறையினர் 24 மணி நேரமும் இயங்கும் 1930 என்ற புதிய எண்ணை அறிவித்துனர்.

பொதுமக்கள் இந்த புதிய எண் மூலம் வங்கி மோசடி குறித்து புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சைபர் காவல்துறையினர் உடனடியாக தகவல் அளித்து அந்த கணக்கை முடக்கி மோசடி செய்தவர்கள் பணம் எடுக்க முடியாமல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  இதன் மூலம் மோசடி நபர்களிடம் இருந்து பொதுமக்களின் பணத்தைப் பாதுகாக்க முடியும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.