அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தலில் பணியாற்றிய அதிமுக நிர்வாகிகள், அவர்கள் வகித்து வந்த கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செங்கல்பட்டு மேற்கு, நீலகிரி, தஞ்சாவூர் தெற்கு, திண்டுக்கல் மேற்கு மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுகின்ற காரணத்தால், செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த,

M. காச (பல்லாவரம் நகர எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர்), C. மகேந்திரன் (பல்லாவரம் நகர மாணவர் அணி துணைச் செயலாளர்), E. பெருமாள் (பல்லாவரம் நகர 41-ஆவது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி), E. இளங்கோவன் (பல்லாவரம் நகர 41-ஆவது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி) 

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, S. சதீஷ் (கோத்தகிரி பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்) K. ராஜா (உதகமண்டலம் நகர 33-ஆவது வார்டு கழகச் செயலாளர்).

தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, S. சரவணன் (மருத்துவக் கல்லூரி பகுதிக் கழகச் செயலாளர்).

திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, K. சுப்பிரமணி (திண்டுக்கல் மேற்கு பகுதி எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர்) ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.