இந்திய பங்குச்சந்தை அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டும் வரும் நிலையில் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு எதில் முதலீடு செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் உள்ளனர். குறிப்பாக மார்ச் மாதம் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் உயர்த்த இருக்கும் வட்டி விகிதம், ரஷ்ய – உக்ரைன் எல்லை பிரச்சனை ஆகியவை முதலீட்டு சந்தை புரட்டி போட்டு வரும் நிலையில் தற்போது மும்பை பங்குச்சந்தை அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் முதலீட்டில் அதிகப்படியான இழப்பைச் சந்தித்து கொண்டு இருக்கும் இந்தியச் சந்தை முதலீட்டாளர்கள் அனைவரும் எல்ஐசி ஐபிஓ-விற்காகக் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் எல்ஐசி ஐபிஓ குறித்துப் பல கேள்விகளுக்குத் தற்போது விடை கிடைத்து வருகிறது.
எல்ஐசி IPO.. பங்கு விலை ரூ.1700 – 3500-க்குள் இருக்கலாம்.. ரெடியாகிகோங்க..!
எல்ஐசி ஐபிஓ
எல்ஐசி ஐபிஓ வெளியிட கடந்த வாரம் இன்சூரன்ஸ் துறை கட்டுப்பாட்டு அமைப்பான IRDAI ஒப்புதல் அளித்த நிலையில், செபியிடம் ஐபிஓ வெளியிடுவதற்காக விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் நேற்றும் BSE, NSE ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து செபி அமைப்பும் இந்த வாரத்திற்குள் ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
65,000 கோடி ரூபாய்
மத்திய அரசு லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் வைத்திருக்கும் 100 சதவீத பங்குகளில் வெறும் 5 சதவீத பங்குகளை இந்த ஐபிஓவில் விற்பனை செய்ய உள்ளது. இந்த 5 சதவீத பங்குகள் விற்பனை மூலம் மத்திய அரசு சுமார் 65,000 கோடி ரூபாய் (8.7 பில்லியன் டாலர்) அளவிலான தொகையைத் திரட்ட உள்ளது.
2000-2100 ரூபாய்
மேலும் ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகம் எதிர்பார்த்து இருக்கும் எல்ஐசி ஐபிஓ-வில் இதன் பங்கு விலை குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. எல்ஐசி நிறுவனம் இந்த ஐபிஓ-வில் ஒரு பங்கை 2000-2100 ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் வெளியிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்படிப் பார்த்தால் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு ஒரு லாட்-க்கு 7 முதல் 8 பங்குகள் கிடைக்கலாம்.
மார்ச் 10-14
மோடி அரசு எல்ஐசி ஐபிஓ-வை நடப்பு நிதியாண்டுக்குள் கட்டாயம் வெளியிட வேண்டும் என மிகப்பெரிய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது நிலையில், இலக்கை அடைய எவ்விதமான தடையும் ஏற்படாமல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் மார்ச் 10-14 ஆம் தேதிகளில் ஐபிஓ வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disinvestment டார்கெட்
மத்திய அரசு நடப்பு நிதியாண்டுக்கான Disinvestment டார்கெட்-ஐ அடைய 63,000 கோடி ரூபாய் பெற வேண்டும், அந்த வகையில் மார்ச் மாதத்திற்குள் மத்திய அரசுக்கு முதலீட்டை ஈர்க்க இருக்கும் ஓரேயொரு வழி எல்ஐசி மட்டுமே. இந்த எல்ஐசி ஐபிஓ-வில் மத்திய அரசு 65,400 கோடி ரூபாய் பெறுவது மூலம் Disinvestment டார்கெட்-ஐ அடைய உள்ளது.
LIC IPO: Size, Share price, IPO date – Full details
LIC IPO: Size, Share price, IPO date – Full details எல்ஐசி ஐபிஓ எப்போது..? பங்கு விலை என்ன..? மோடி அரசுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா..?