ஹிட்லருடன் ஒப்பிட்டு.. ஜஸ்டின் மீது பாய்ந்த மஸ்க்.. அப்புறம் அடிச்சார் பாருங்க பல்டி!

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடியுவை ஹிட்லருடன் ஒப்பிட்டு டிவீட் போட்டு சர்ச்சையைக் கிளப்பி விட்டார்
எலான் மஸ்க்
. ஆனால் தனது டிவீட்டை பின்னர் அவர் நீக்கி விட்டார்.

கனடாவில் போக்குவரத்து ஊழியர்கள், குறிப்பாக லாரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லாரிகளை இயக்காமல் நிறுத்தி அமெரிக்கா- கனடா இடையிலான போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பலரும் போராட்டத்தில் குதிக்கவே கனடாவே ஸ்தம்பித்தது. அந்த நாட்டின் பொருளாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதை கனடா அரசு கட்டாயமாக்கியதைக் கண்டித்தே இந்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் லாரி டிரைவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக எலான் மஸ்க் ஒரு டிவீட் போட்டார். அது சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. ஹிட்லருடன் ஒப்பிட்டு மஸ்க் போட்ட டிவீட்டுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

ஜஸ்ட் 7 நிமிஷம்.. உலகின் நம்பர் 1 பணக்காரராக திகழ்ந்த யூடியூபர்!

மஸ்க் போட்டிருந்த டிவீட்டில் ஹிட்லரின் படம் இடம் பெற்றிருந்தது. அதில், தயவு செய்து என்னை ஜஸ்டின் ட்ருடியுவுடன் ஒப்பிடாதீர்கள் என
ஹிட்லர்
கூறுவது போல வாசகம் இடம் பெற்றிருந்தது. இதுதான் ஜஸ்டின் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்து விட்டது.

கடந்த ஜனவரி மாதமே லாரி டிரைவர்களுக்கு ஆதரவாக டிவீட் போட்டிருந்தார் ஜஸ்டின். இந்த நிலையில் கனடா பிரதமரை விமர்சித்து டிவீட் போட்டு விமர்சனங்களை வாங்கிக் கட்டிக் கொண்டார். ஹிட்லர் டிவீட்டுக்கு கடும் கண்டனம் வந்ததைத் தொடர்ந்து தனது டிவீட்டை நீக்கி விட்டார் மஸ்க்.

மஸ்க்குக்கு டிவிட்டரில் 74 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். மிக முக்கியமான நபராக அவர் விளங்கி வருகிறார். அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை சமீப காலமாக பதிவிட்டு வருகிறார் ஜஸ்டின். அதேசமயம் அவரு பல டிவீட்டுகள் பெரும் வரவேற்பைப் பெற்றவை ஆகும்.

ஹிட்லருடன் ஜஸ்டினை ஒப்பிட்டதற்கு அமெரிக்க யூதர்கள் கமிட்டியும் மஸ்க்கை கடுமையாக கண்டித்திருந்தது. மஸ்க் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அது கோரியிருந்தது. கனடா நாட்டு தொழில்துறை அமைச்சர் பிரான்காய்ஸ் பிலிப்பி சாம்பெய்னும்
மஸ்க் டிவீட்
குறித்து அதிர்ச்சி தெரிவித்திருந்தார். இதையடுத்து தனது டிவீட்டை நீக்கி விட்டார் மஸ்க்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.