மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில், ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் தி.மு.க மற்றும் பழனிசாமி கம்பெனிகள் பணத்தை வாரி இறைப்பதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது,
“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரம் ஓய்ந்தவுடன் நேற்று மாலையிலிருந்து தமிழகம் முழுவதும் பணமழை ஆறாக ஓடுவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரம் ஓய்ந்தவுடன் நேற்று மாலையிலிருந்து தமிழகம் முழுவதும் பணமழை ஆறாக ஓடுவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.(1/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 18, 2022
மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில், ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் தி.மு.க மற்றும் பழனிசாமி கம்பெனிகள் பணத்தை வாரி இறைப்பதை மாநில தேர்தல் ஆணையமும், காவல்துறையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது”
இவ்வாறு டிடிவி தினகரன் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.