உக்ரைன்
எல்லையில்
ரஷியா
கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்ததில் இருந்து அங்கு தொடர்ந்த போர் பதற்றம் நிலவி வருகிறது. ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஒருபுறம் கடும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், மறுபுறம் சமாதான பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றன.
இதன் விளைவாக உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதாக ரஷியா அண்மையில் அறிவித்திருந்தது. ஆனால், தன்னுடைய இந்த அறிவிப்புக்கு மாறாக உக்ரைன் மீது ரஷியா அவ்வபோது தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் விதமாக, உக்ரைன் மீது ரஷியா இன்று தொடர்ந்து 29 முறை குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிட்லருடன் ஒப்பிட்டு.. ஜஸ்டின் மீது பாய்ந்த மஸ்க்.. அப்புறம் அடிச்சார் பாருங்க பல்டி!
டான்பஸ் மாகாணத்தில் உக்ரைனின கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற நகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 29 முறை இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், ஒரு கிராமத்தில் உள்ள மழலையர் பள்ளியும் இந்த தாக்குதலுக்கு தப்பவில்லை என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
இந்த தாக்குதலால் உயிர் பலி நிகழ்ந்தது குறித்து உடனடி தகவல்கள் எதுவுமில்லை என்றாலும், டான்பஸ் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. ரஷியாவின் இந்த திடீர் தாக்குதலால் உக்ரைனின் கிழக்கு பகுதியில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷியா -உக்ரைன் போரால் மூன்றாவது உலக போர் மூண்டுவிடுமோ என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.
ரஷ்யா படையெடுத்தால்.. இந்தியா எங்கள் பக்கம் நிற்கும்.. அமெரிக்கா பரபர தகவல்!
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரஷியா தனது படைகளை குவிக்க தொடங்கியது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை ரஷியா அங்கு குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.