வாரத்தில் 4 நாட்கள் வேலை – அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்!

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே அரசு ஊழியர்கள் பணிபுரியும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில், வாரத்தில் நான்கு நாள் மட்டுமே வேலை என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், இந்த திட்டத்துடன், ஊழியர்களுக்கு மற்றுமொரு பெரிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதாவது, அலுவலக நேரம் முடிந்த பின் அலுவலகம் சம்பந்தப்பட்ட அனைத்து சாதனங்களையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்கலாம்.

அலுவலகம் சம்பந்தப்பட்ட எந்த செய்திகள் மற்றும் அழைப்பிற்கு பதிலளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதனால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பாதிக்கப்படுமோ என்ற அச்சமில்லாமல் இருக்கலாம். உயர் அதிகாரிகள் அழைத்தால் கூட அதற்கு பதிலளிக்கத் தேவையில்லை. “ரைட் டூ டிஸ்கனெட்” என்ற திட்டம் இதற்கு வழிவகை செய்கிறது.

விடாது பெய்யும் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 117 பேர் பலி!

இது குறித்து
பெல்ஜியம்
நாட்டின் பிரதமர் அலக்சாண்டர் டி க்ரூ கூறியதாவது:

மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கோவிட் தொற்று லேபர் சட்டங்களை தலைகீழாக புரட்டி விட்டது. அது மட்டுமின்றி கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான ஊரடங்கு காலத்திலும் நம்முடைய வேலை முறை மிகவும் சீராக மாறியுள்ளது. எனவே தற்போது இருக்கும் லேபர் மார்க்கெட் அதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே அரேபிய நாடுகளில் நான்கு நாட்ள் வேலை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தற்போது பெல்ஜியம் நாட்டில் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.