பிளைட் பிடிக்கும் நேரத்தில் அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை சமந்தா!

சமந்தா இப்போதெல்லாம் தவறாமல் செய்திகளில் இடம்பிடித்து விடுகிறார். முதலில், சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவிடமிருந்து’ பிரிந்த செய்தி, இணையத்தில் தீயாக பரவியது. பிறகு’ அல்லு அர்ஜுன் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘புஷ்பாவில்’ ஊ சொல்றியா மாமா பாடலுக்கு தனது அற்புதமான நடன அசைவுகளுக்காக சமந்தா வைரலானார்.

அந்த பாடலுக்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும்’ சமந்தாவின் நடன அசைவுகள் மற்றும் அவரது வசீகரம் அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டப்பட்டது. ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்கி, தங்கள் சொந்த வெர்ஷனை பகிர்ந்து கொள்வதன் மூலம்’ இந்த பாடல் இன்னும் சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளது.

ஆனால் தற்போது சமந்தா இன்னொரு பாடலுக்கு அட்டகாசமாக ஆடியுள்ளார். ஆனால் அது அவர் நடிக்கும் படமல்ல.

தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் வரவிருக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் அரபி குத்து பாடலான ‘ஹலமதி ஹபிபோ’ பாடலுக்கு சமந்தா ஆடும் வீடியோ தான் இப்போது ரசிகர்களின் லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ் ஆக மாறியுள்ளது.

இப்போது அரபிக் குத்து பாடல், இணையத்தில் வைரலாகி இருப்பதால்’ சமந்தாவும் ட்ரெண்டிங்கில் குதித்து, இரவு நேர விமானத்தைப் பிடிக்கும் போது விமான நிலையத்தில் வைத்து’ ஹலமதி ஹபிபோ பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.

முன்னதாக, பீஸ்ட் நடிகை பூஜா ஹெக்டே’ , மாலத்தீவில் நீலக்கடலுக்கு நடுவே ஒரு படகில் ஓய்வெடுத்து மகிழ்ந்தபோது’ ‘ஹலமிதி ஹபிபோ’ பாடலுக்கு நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில்  வெளியிட்டார்.

நெல்சன் இயக்கத்தில்’ விஜய் நடிப்பில், ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஆக்‌ஷன் என்டர்டெய்னரான பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் ‘அரபிக் குத்து’, யூடியூப்பில் வெளியான ஒரே நாளில் 20 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.

உண்மையில், இந்தப் பாடல் வெளியிடப்பட்ட ஏழு நிமிடங்களுக்குள், 4.5 லட்சம் பார்வைகளைப் பெற்றது, 1.75 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் லைக்குகளை  வழங்கினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.