லொசன்னே,
பெண்களுக்கான 15-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தில் ஜூலை 1-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதற்கான போட்டி அட்டவணையை சர்வதேச ஆக்கி சம்மேளம் நேற்று வெளியிட்டது. இந்திய அணி ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கிறது. இங்கிலாந்து, நியூசிலாந்து, சீனா அணிகளும் அந்த பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜூலை 3-ந்தேதி இங்கிலாந்தை சந்திக்கிறது.
இது குறித்து இந்திய கோல் கீப்பர் சவிதா கூறுகையில், ‘இது கடினமான பிரிவு. இங்கிலாந்து (தரவரிசையில் 3-வது இடம்), நியூசிலாந்து (8-வது இடம்) எங்களை விட தரவரிசையில் முன்னணியில் உள்ளது. சீனா எப்போதும் ஆச்சரியம் அளிக்கக்கூடிய அணி. எதிரணியை பற்றி கவலைப்படாமல் ஒரு அணியாக நமது திறமை மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம்’ என்றார்.
Here are the Pools for the FIH Hockey Women’s World Cup Spain and Netherlands 2022.
The tournament to be played from 1 July – 17 July 2022.#HWC2022#HockeyInvitespic.twitter.com/7voU6jP2UX
— International Hockey Federation (@FIH_Hockey) February 17, 2022