ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக டிவிட்டர் கணக்கு முடங்கியது.
ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது மீண்டும் முயற்சிக்கவும் என்ற குறுந்தகவலைக் கண்டு நெட்டிசன்கள் எரிச்சல் அடைந்தனர். இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பதிவாளர்கள் டிவிட்களை பதிவிட முடியவில்லை என்றும் தரவிறக்கம் செய்ய முடியவில்லை என்றும் புகார்கள் அளித்தனர்.
இதையடுத்து அரைமணிந நேர பாதிப்புக்குப் பின்னர் மீண்டும் டிவிட்டர் தளம் இயங்கத் தொடங்கியது. சில தொழில்நுட்ப பிழைகள் ஏற்பட்டு சரி செய்து வருவதாக டிவிட்டர் நிறுவனம் பொதுவான விளக்கம் அளித்துள்ளது.