tamil nadu NTK Seeman Controversial Speech :தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தனது கட்சியின் வேட்பாளர்கள் 60 பேரை திமுக கடத்திவிட்டதாக நாம் தமிழகர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த தீவிர பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் பல வேட்பாளர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதில் குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் வேட்பார்கள் 60 பேர் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது இந்நிலையில், தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட சீமான் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில்,
நாம் தமிழர் கட்சி பாஜகவின் பி டீம் என்று அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் பல இடங்களில் பாஜகவை எதிர்த்து திமுக போட்டியிடவில்லை அது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் நாம் தமிழருக்கு ஓட்டு போட வேண்டாம் என்று சொல்கிறார்கள் ஆனால் சரியான ஆண்மகனாக இருந்தால், பாஜக தனித்து நிற்கிறது அதற்கு ஓட்டு போட வேண்டாம் என்று ஏன் சொல்லவில்லை.
நீங்கள் சரியான வீரனாக இருந்தால் என் பிள்ளைகள் 60 பேரை கடத்தினீர்களே பாஜகவில் ஒரு வேட்பாளரை கடத்தி பாருங்கள் சரியான ஆளாக இருந்தால் இதை செய்யுங்கள். அப்படி செய்தால் உங்களை திகார் சிறையில் அடைத்துவிடுவார்கள். அந்த பயம் இருக்கும்போது.. சின்னபிள்ளைகள் இருந்தால் கடத்தி விடுவது எங்கே என்னை கடத்துங்கள் பார்ப்போம் என்று ஆவேகமாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், அம்மையார் துர்கா ஸ்டாலின் நியாயமா கோவில் கோவிலாக செல்வதை விட்டுவிட்டு மோடியின் படத்தை வைத்து கும்பிடலாம். அவர் இல்லை என்றால் ஸ்டாலின் முதல்வராக வந்திருக்கவே முடியாது. மோடி இல்லை என்றால் உங்களுக்கு அரசியல் இல்லை என்று கூறியள்ளார். இவரின் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்ணன் எதோ கேக்குறாரு, செய்வதற்கு துப்பு துணிவு, முதுகெலும்பு எதாச்சும் இருக்கா @arivalayam
RT max👇 pic.twitter.com/xX5OvqQnFs
— பிரியக்குமார் அ (@ProudTamizhan1) February 17, 2022
இது தொடர்பான வீடியோ பதிவை பார்த்த திமுகவினர் உட்பட பலரும் முதல்வர் ஸ்டாலினின் மனைவி அரசியல் தொடர்பு இல்லாமல் இருந்து வரும் நிலையில், பொதுவெளியில் அவரை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“