Tamil Lifestyle Update : யானை இருந்தாலும் பலன் இறந்தாலும் பலன் என்று சொல்வார்கள். அதேபோல் தாவரங்களில் வாழை. இருந்தாலும் பலவகையில் நன்மை தரும். இறந்தாலும் பல நன்மைகளை கொடுக்கும். வாழையில்உள்ள அனைத்து பாகங்களும் உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் நன்மை அளிக்கும் வாழைக்காய், வாழைப்பூ, வாழைப்பழம், வாழைத்தண்டு உள்ளிட்பல ஆரோக்கியமான உணவுகள் வாழையில் இருந்து நமக்கு கிடைக்கிறது.
இதில் வாழைத்தண்டு, வாழைக்காய் ஆகியவற்றை சமைப்பதற்கு நமக்கு எளிமையாக இருந்தாலும் வாழைப்பூ நம் பொறுமையை மிகவும் சோதிக்கும் வகயைில் தான் இருக்கும். அதற்கு முக்கிய காரணம் வாழைப்பூவின் அமைப்பு. வாழைப்பூவை சுத்தம் செய்ய வேண்டுமே என்று மலைத்துக்கொண்டு பலரும் இதை சமைப்பதை தவிர்த்து விடுகினறனர். ஆனால் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வாழைப்பூவில் பயன்கள் அதிகம்.
இந்த வாழைப்பூவின் ஆரோக்கியம் அதிகம். அதே சமயம் சில வழிமுறைகளின் மூலம் வாழைப்பூவை எளிமையாக சுத்தம் செய்யலாம். முதலில் வாழைப்பூ கிடைக்கும்போதுவாங்கி வைத்துக்கொள்வீர்கள் என்றால் அதில் ஒரு ஒரு ரப்பர் பேண்ட் போட்டு இதழ்கள் கிழிந்துவிடாமல் பாதுகாப்பாக வைத்திருந்தால் வாழைப்பூ 10 நாட்கள் வரை கெடமாமல் இருக்கும்.
வாழைப்பூவை எளிமையாக சுத்தம் செய்வது எப்படி?
முதலில் வாழைப்பூவின் இதழ்களை பிரித்து அதில் உள்ள பூக்களை காம்புடன் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு சில இதழ்களை எடுத்த பிறகு அடுத்த இதழ்களை எடுப்பது கடினமாக இருக்கும்.
அப்போது வாழைப்பூவை தலைகீழாக வைத்து இதழ்களை உரித்து எடுக்கலாம். வாழைப்பூவை காம்புடன் எடுப்பது அதை எளிமையாக நறுக்குவதற்கு உதவியாக இருக்கும்.
கிடைத்த அனைத்த இதழ்களையும் உரித்த பின்பு, இறுதியாக கிடைக்கும் பூவை அரையாக கட் செய்து இதழ்களை எடுத்து விட்டு அதில் உள்ள பூக்களை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளலாம். வீட்டில் மோர் இல்லாத சமயத்தில் இந்த பூவை தண்ணீரில் போட்டு குடிக்கலாம். இது புற்றுநோயை குணப்படுத்தும் திறன் கொண்டது.
அதன்பிறகு காம்புடன் வெட்டி வைத்துள் பூக்கயை எடுத்து அதன் நுனியில் கொஞ்சம் தேய்க்க வேண்டும். அப்போது அதில் இருக்கும் தண்டு வெளியில் வரும். அதன்பிறகு வாழைப்பூவின் காம்பை பிடித்துக்கொண்டு கீழே வைத்து ஒரு கத்தியை வைத்து அழுத்தி இழுகவும். அப்போது தண்டு தணியாக வந்துவிடும்.
இப்படி அனைத்து பூக்களையும் தண்டுகளை எடுத்துவிட்டு, எளியமையாக கட் செய்யலாம். கட் செய்யும்போது பூவின் காம்பி்ல் பிடித்துக்கொண்டு கட் செய்வ எளிமையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“