என்னது காந்தி குறுக்க வந்துட்டாரா..அப்போ யாரதான்டா சுடபோனிங்க ? சர்ச்சையில் சிக்கிய கார்த்திக் சுப்புராஜ்..!

தமிழ் சினிமாவில் பிட்சா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கார்த்திக் சுப்புராஜ். அதைத்தொடர்ந்து ஜிகர்தண்டா, இறைவி என படங்களை இயக்கி கவனிக்கப்படும் இயக்குனராக மாறினார். பின்பு
பேட்ட
படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பை பெற்று அதில் வெற்றியும் கண்டு தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.

இந்நிலையில் இவர் இயக்கத்தில்
விக்ரம்
நடிப்பில் OTT யில் வெளியான
மகான்
திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ், சிம்ரன், பாபி சிம்ஹா ஆகியோரும் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்தை தணிக்கை குழு நீக்க சொன்னதாக கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தனுஷிற்கு வந்த திடீர் பாசம்..இது என்ன புதுசா இருக்கு..!

அதாவது இப்படத்தில் உங்களை மாறி கொள்கை வெறி புடிச்சவன் ஒருவன் தான் காந்தியை சுட்டு கொன்றான் என ஒரு வசனம் வருமாம். அந்த வசனத்தில் கார்த்திக் சுப்புராஜ் காந்தியை சுட்டு கொன்ற கோட்ஸேவின் பெயரை குறிப்பிடாமல் அதை மறைமுகமாக உணர்த்தியிருப்பார்.

இதில் நீங்கள் கோட்ஸேவை பற்றி பேசியிருக்கிறீர்கள், அதனால் பிரச்சனை வரக்கூடும். அதன் காரணமாக இந்த வசனத்தை நீக்கிவிடுங்கள் என தெரிவித்தனராம். அதாவது நீங்கள் காந்தியை பற்றி எதுவேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் கோட்ஸேவை பற்றி சொன்னால் பெரும் பிரச்சனை ஏற்படும் என்றமாதிரி சொன்னார்களாம்.

இதனால் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் அந்த வசனத்தை நீக்கிவிட்டாராம். மேலும் காந்தி இறந்துவிட்டார் என்று சொல்லலாம், ஆனால் காந்தியை சுட்டுவிட்டனர் என்று சொன்னால் இந்த நாட்டில் பிரச்சனை வரும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

இருந்தாலும் நம் நாடு இன்று அந்த நிலையில் தான் உள்ளது என கார்த்திக் சுப்புராஜ் கூறியிருக்கிறார். தற்போது இவர் பேசியிருக்கும் இந்த வீடியோ சமூகத்தளங்களில் செம வைரலாகிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவரின் மனசையும் கவரும் மருத – மனம் திறந்த ராதிகா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.