நாட்டில் 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு அட்ரிஷன் விகிதமானது உச்சம் தொட்டுள்ளது. இது கிரேட் ரிசைக்னேஷன் காலம் என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் ஊழியர்கள் கையில் இருக்கும் வேலைகளை விடுத்து, சிறப்பான வாய்ப்புகள் கிடைத்தால் மாறியும் வருகின்றனர்.
இதற்கிடையில் தான் நிறுவனங்களின் அட்ரிஷன் விகிதமானது 2020ல் 12.8 சதவீதமாக இருந்தது. இது 2021ல் 21% ஆக அதிகரித்துள்ளது.
ரீடைல் பணவீக்கம் 6 மாத உயர்வு..!
முந்தைய 3 காலாண்டு நிலவரம்
இப்படி ஒரு சவாலான நிலைக்கு மத்தியில் தான் ஐடி நிறுவனங்கள் முதல் மூன்று காலாண்டுகளில், 3,50,000 பேரை பணியமர்த்தியுள்ளன. இது அதன் மொத்த ஊழியர்களில் 14 – 15 சதவீதம் பங்களித்துள்ளனர். இது நடப்பு காலாண்டில் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
TCS தான் டாப்
இந்த பணியமர்த்தலில் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் அதிகபட்ச ஆட்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இன்ஃபோசிஸ், காக்னிசண்ட், ஹெச்.சி.எல் டெக்னாலஜி, கேப்ஜெமினி, மற்றும் விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளது.
பிரெஷ்ஷர்களுக்கு வாய்ப்பு
இந்த நிறுவனங்கள் அதிக பிரெஷ்ஷர்களை பணியமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அட்ரிஷன் விகிதமானது அதிகரித்து வரும் நிலையில், தேவையானது அதிகமாகவே உள்ளது. அதேசமயம் பணியாளர்கள் பணியமர்த்தலும் அதிகமாகவே உள்ளது.
BRIC நாடுகளில் அதிகம்
தேவை அதிகம் உள்ள நிலையில், சம்பள உயர்வு 9% அதிகரிக்கும் என ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச எண்ணிக்கையாகும். இது பிரிக் (BRIC) நாடுகளில் மிக உயர்ந்ததாக இருக்கும் என்றும் அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. இதில் பிரேசிலில் 5% ஆகவும், இதே சீனாவில் 6% ஆகவும், ரஷ்யாவில் 6.1% ஆகவும் இருக்கலாம் என ஆய்வறிக்கை கூறுகின்றது.
வளர்ச்சி எதிர்பார்ப்பு
அதே போல 2022ல் நிறுவனத்தின் வருவாயும் உச்சத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வளர்ச்சி விகிதம் 19 – 21 சதவீதம் அல்லது 240 – 280 பில்லியன் டாலராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த 15 – 20 நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் நன்றாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
IT companies plans to hire more freshers as attrition rate highest in 20 years
IT companies plans to hire more freshers as attrition rate highest in 20 years/20 வருடங்களில் இல்லாத மோசமான நிலை.. ஆனா ஐடி துறையினருக்கு ஜாக்பாட் தான்..!