நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக
எச் வினோத்
இயக்கத்தில் ‘
வலிமை
‘ படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இதனை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தனது 61 படத்தில் நடிக்கிறார்.
‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், டிரெய்லர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அஜித்தின் லுக் இளமையாக இருப்பதாக பலரும் மோஷன் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
பொங்கல் வெளியீடாக ‘வலிமை’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர் படக்குழுவினர். ஆனால் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ‘வலிமை’ படம் பிப்ரவரி 24 ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் செய்யும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் படக்குழுவினர்.
22 ஆண்டுகள் கழித்து அஜித்துடன் இணையும் பிரபல நடிகை: ‘ஏகே 61’ படத்தின் அசத்தல் அப்டேட்!
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் ‘வலிமை’ படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது உறுதியாகியுள்ளது. அண்மையில் வெளியான திரையரங்குகளில் 100% தமிழ்நாடு அரசின் அறிவிப்பும் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ‘வலிமை’ பட வெளியீட்டை திருவிழா போல் கொண்டாட தயாராகி வருகின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில் ‘வலிமை’ படம் பற்றி திரிஷா இல்லன்னா நயன்தாரா, AAA படத்தின் இயக்குனர்
ஆதிக் ரவிச்சந்திரன்
ட்வீட் ஒன்று பதிவிட்டுள்ளார். அதில், வலிமை படத்தை பார்க்கப் போறீங்களா? அப்போ இந்த சீனில் உங்கள் காதை பொத்திக் கொள்ளுங்கள். அஜித் ஆக்சனில் தெறிக்க விடுவார் அவரது கண்களில் அனல் தெரியும் என புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். ஆனால் எந்த காட்சி என அதில் குறிப்பிடவில்லை. இதனால் ரசிகர்கள் வேற லெவல் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நெஞ்சுக்கு நீதி: தேர்தலைத் தாண்டி திரைப்படத்திலும் உதித்த உதய சூரியன்!