நடிகர்
விஷ்ணு விஷால்
தயாரித்து நடித்துள்ள படம்
எஃப்ஐஆர்
. கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மனு ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில்
ரைசா வில்சன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், கவுதம் மேனன் மற்றும் கௌரவ் நாராயணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், அஸ்வத் இசையமைத்துள்ளார்.
அரபிக் குத்து பாட்டு காப்பியா? ஆதாரத்துடன் கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்ஸ்!
இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைத்தபோதும் சில சர்ச்சைகளிலும் சிக்கியது. இந்நிலையில் இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் ஆனந்த், நடிகை ரைசா வில்சன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
ராம்சரண் படத்திலும் வாரியிறைக்கும் ஷங்கர்… ஒரு சண்டைக்காட்சிக்கு இத்தனை கோடிகளா?
அதில் பேசிய நடிகர் விஷ்ணு, விஷால் எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தை கொரோனா உள்ளிட்ட பல சவால்களுக்கு மத்தியில் படமாக்கியதாக தெரிவித்தார். இப்படத்திற்கு மக்கள் கொடுத்திருக்கும் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார் விஷ்ணு விஷால்.
13 வருடங்கள் பேசாமல் இருந்த இளையராஜா கங்கை அமரன்.. இதுதான் காரணம்!
தொடர்ந்து பேசிய விஷ்ணு விஷால், இந்தப் படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா ஜான் ஆகியோர் நாயகிகளாக நடித்தனர். ஆனால்
FIR
திரைப்பட நிகழ்ச்சி மேடைகளில் மூன்று நடிகைகளையும் ஒன்று சேர்க்க முடியவில்லை. இவர்கள் வளர்ந்து வரும் நடிகைகள் தான். இருந்தபோதும் அதை தன்னால் செய்ய முடியவில்லை என்று கூறிய விஷ்ணு விஷால் இந்த விவகாரத்தில் ஒரு தயாரிப்பாளராக தான் தோல்வி அடைந்து விட்டதாக வேதனை தெரிவித்தார்.
தல, தளபதி ரசிகர்களையே வியக்க வைத்த எதற்கும் துணிந்தவன்!