சூப்பர் ஸ்டாரின்
அண்ணாத்த
படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீசை தொட்டாலும் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெறவில்லை. அதனால்
ரஜினி
மற்றும் படக்குழுவிற்கு கொஞ்சம் அப்செட் தான்.
அதனால் அடுத்த அடி, மரண அடியாக இருக்க வேண்டும் என்று யோசித்த ரஜினி தற்போது ட்ரெண்டில் உள்ள இயக்குனர் நெல்சனுக்கு, அதிரடியாக வாய்ப்பைக் கொடுத்தார்.
இந்த படத்தை
நெல்சன்
இயக்குகிறார், சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்ற அட்டகாசமான அறிவிப்பு சென்ற வாரம் வெளிவந்தது.இந்த படத்தை வைத்து பழைய மார்க்கெட்டை பிடிக்க வேண்டுமென்று, ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து வருகிறார் ரஜினி. அதற்காக அவர் கையில் எடுத்து அஸ்திரம் ஹீரோயின் செலக்சன்.
பிரஸ்மீட்டுக்கு வராத நடிகைகள்… வேதனையில் புலம்பிய பிரபல ஹீரோ!
ரஜினியின் வயதை வைத்து பார்த்தால், அதற்கு சரியான சாய்ஸ் பாலிவுட்டின்
ஐஸ்வர்யா
ராய் தான். அந்த நடிகை என்றால்பட்ஜெட் எகிறும் என யோசித்த சன் பிக்சர்ஸ் ரஜினியிடம் அதிரடியாக ஒரு ஒப்பந்தம் போட்டது.ரஜினி என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் சன் பிக்சர்ஸ், அவரது மார்க்கெட் கொஞ்சம் இறங்கியதால், இந்த முறை விடாப்பிடியாய் அதிரடி திட்டத்தில் இறங்கியது.
அதாவது, ஐஸ்வர்யாராயை ஒப்பந்தம் செய்கிறோம் ஆனால் உங்கள் சம்பளத்தை 20 கோடி குறைத்துக் கொள்ளுங்கள், அப்போதுதான் எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் என கூறியுள்ளது.சன் பிக்சர்சின் இந்த முடிவை யோசித்த ரஜினிகாந்த். சம்பளத்தைக் குறைத்துக் கொள்கிறேன் ஆனால் வரும் லாபத்தில் ஒரு சிறிதளவு பங்கு வேண்டும் என கேட்டுள்ளார். இறுதியில் ரஜினியின் சம்பளம் 80 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஒவ்வொரு ஏரியாவிற்கும் பங்குகொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு சன் பிக்சர்ஸ் யோசித்து ஒப்புதல் வழங்கி இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஒத்துக் கொண்டாள் தற்போது ரஜினி வாங்கும் சம்பளத்தை விட 50 கோடி அதிகமாக லாபம் கிடைக்குமாம்.
படம் நன்றாக ஓடினால் கிட்டத்தட்ட 130 கோடி வரை வசூல் செய்யலாம் என்பது ரஜினியின் கணக்கு. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாகவும்அடுத்த வருட பொங்கலை டார்கெட் செய்து இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நெல்சன் அடுத்த படங்களை முடித்துவிட்டு தான் சூப்பர் ஸ்டாருடன் இணைகிறார். அதேபோல் ரஜினிக்கு தற்போது குடும்பத்தில் நடக்கும் சில பிரச்சனைகளையும் முடிவுக்குக் கொண்டு வருகிறாராம்.
மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?