பனாஜி,
கோவாவில் நடந்து வரும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு அரங்கேறிய 94-வது லீக் ஆட்டத்தில்,
நார்த் ஈஸ்ட் யுனைடெட்(கவுகாத்தி) – பெங்களூரு எப்.சி. அணிகள் பலப்பரிட்சை நடத்தின.
இந்த போட்டியில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.க்கு அதிா்ச்சி தோல்வி அளித்தது.நார்த் ஈஸ்ட் யுனைடெட்(கவுகாத்தி) அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அந்த அணியால் முதல் 4 இடங்களுக்குள் முன்னேறும் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இன்றைய ஆட்டங்களில் கேரளா பிளாஸ்டர்ஸ்- ஏ.டி.கே.மோகன் பகான் (இரவு 7.30 மணி), ஐதராபாத்-கோவா (இரவு 9.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.