தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குகளை பதிந்துவரும் நிலையில், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் எவ்வளவு சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என தெரியவந்துள்ளன.
தமிழகத்தில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு, தற்போது விறுவிறுபபடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 மணி வரை கிடைத்துள்ள தரவுகளின்படி, நகராட்சியில் 34.20 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநகராட்சிகளில் 27.65 சதவிகிதமும், பேரூராட்சிகளில் 42.08 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதில், நகராட்சியில் 77,139 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதேபோல், மாநகராட்சிகளில் 2,15,087 பேரும், பேரூராட்சிகளில் 39,528 பேரும் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM