‘‘சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழ் தாத்தா’’- பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத அய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது;

‘‘தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத அய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூர்கிறேன். தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு அவர் ஆற்றிய அரும்பணிக்காக போற்றப்படுபவர், சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன் உன்னதமான பாரம்பரியத்தைக் கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவர்.’’ எனக் கூறியுள்ளார்.

— Narendra Modi (@narendramodi) February 19, 2022

இதுபோலவே சத்ரபதி சிவாஜி மகராஜ் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

சிவாஜியின் தன்னிகரற்ற தலைமைத்துவம் மற்றும் சமூக நலனுக்கான முக்கியத்துவம் பல தலைமுறை மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

‘‘சத்ரபதி சிவாஜி மகராஜ் பிறந்தநாளில் அவருக்கு நான் தலை வணங்குகிறேன். அவரது தன்னிகரற்ற தலைமைத்துவம் மற்றும் சமூக நலனுக்கான முக்கியத்துவம் பல தலைமுறை மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். வாய்மை மற்றும் நீதியின் மாண்புகளுக்காக முன்னிற்கும்போது அவர் சமரசம் செய்து கொள்ளாதவராக இருந்தார். அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவு செய்வதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.