பெய்ஜிங்: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி)கூட்டம், 40 ஆண்டுகளுக்கு பின்னர் 2023ல் மும்பையில் நடைபெற உள்ளது. முன்பு இந்த கூட்டம் 1983ல் டில்லியில் நடந்தது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் 101 உறுப்பினர்கள் ஓட்டுப்போடும் உரிமை பெற்றுள்ளன. 45 நாடுகள் கவுரவ உறுப்பினர்களாக உள்ளன. ஒரு நாடு ஓட்டளிக்கும் உரிமை இல்லாமல் கவுரவ உறுப்பினராக உள்ளது. சர்வதேச விளையாட்டு அமைப்புகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட மூத்த பிரதிநிதிகள், ஐஓசி கூட்டத்தில் பங்கேற்பது வழக்கம். ஆண்டுதோறும் இந்த கூட்டம் நடப்பது வழக்கம். இதில் எடுக்கப்படும் முடிவுகள் மிகவும் இறுதியானது என்பதால், கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. சாதாரண கூட்டம் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் என்றாலும், முக்கிய தருணங்களில், 3ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு அல்லது தலைவர் முடிவுப்படி ஐஓசி கூட்டத்தை கூட்ட முடியும்.
இந்நிலையில், சீன தலைநகர் பெய்ஜிங்கில் 139வது ஐஓசி.,யின் இந்த ஆண்டிற்கான கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்திய சார்பில் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபிநவ் பிந்தரா, ஐஓசி உறுப்பினர் நீடா அம்பானி, ஐஓஏ தலைவர் நரிந்தர் பத்ரா, மத்திய இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, அடுத்த ஆண்டிற்கான (2023) கூட்டத்தை மும்பையில் நடத்துவதற்கான திட்டத்தை முன்மொழிந்தனர். இதனை அனைத்து நாடுகளும் ஒரு மனதாக ஏற்று கொண்டன. இதனையடுத்து 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் 2வது முறையாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் நடைபெற உள்ளது.
Advertisement