கல்வான் மோதல் தொடர்பாக ராகுல் காந்தியின் கருத்து தன்னை வேதனைக்குள்ளாகியதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் கோண்டா நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், சர்வதேச அளவில் இந்தியா வலுவான நாடாக உருவெடுத்துள்ளதாகவும், நாம் தெரிவிக்கும் கருத்துக்கள் அனைத்தையும் உலக நாடுகள் உற்றுநோக்குவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், கல்வான் மோதலில் பல இந்திய வீரர்களும், 3 முதல் 4 சீன வீரர்கள் மட்டுமே உயிரிழந்ததாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கூறியது வேதனை தருவாக ராஜ்நாத் சிங் கூறினார். மக்கள் இது குறித்து பேசட்டும் என பிரதமர் கூறியதால்தான், பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தும், ராகுல் காந்தியின் கருத்திற்கு பதில் அளிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.