பாக்., இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை| Dinamalar

வாஷிங்டன்-மருத்துவக்
காப்பீட்டு திட்டத்தில் மோசடி செய்த பாகிஸ்தானை சேர்ந்த இளைஞருக்கு, 12
ஆண்டு சிறைத் தண்டனை மற்றும்360 கோடி ரூபாய் அபராதத்தை அமெரிக்க
நீதிமன்றம் விதித்துள்ளது.ந

ம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரை
சேர்ந்தவர் முகமது ஆதிக், 33. அமெரிக்க மருத்துவ சேவை திட்டத்தின் கீழ்
குறிப்பிட்ட சில மாகாணங்களைச் சேர்ந்தவர்களின் மருத்துவக் காப்பீட்டு
திட்டம், மருத்துவ அறிக்கை ஆகியவற்றை, பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் உள்ள
நிறுவனம் கவனித்து வருகிறது.இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த முகமதுஆதிக்,
இந்தியா உட்பட பல நாட்டைச் சேர்ந்தவர்களின் பெயரைப் பயன்படுத்தி, போலி
ஆவணங்களை தயாரித்து உள்ளார்.

மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாமலேயே, அந்த
பெயர்களில் போலி ‘பில்’களை தயார் செய்து, 298 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி
செய்துள்ளார். மேலும், பணப் பரிமாற்ற மோசடியிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.இது
தொடர்பான வழக்குகளை விசாரித்த அமெரிக்காவின் இல்லினாய்ஸ் வடக்கு மாகாண
நீதிமன்ற நீதிபதி மணீஷ் ஷா, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முகமது ஆதிக்குக்கு 12
ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும்360 கோடி ரூபாய் அபராதம் விதித்து
தீர்ப்பளித்துள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.