Tamil News Today Live: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70% வாக்குகள் பதிவு

Tamil Nadu News Updates: தமிழ்நாட்டில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60.70 சதவீகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகப்பட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 80.49% சதவீத வாக்குகளும், மாநகராட்சிகளில் குறைந்தபட்சமாக சென்னையில் 43.59 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

பாஜக பூத் முகவர் மேலூர் கிளைச்சிறையில் அடைப்பு

வாக்குச்சாவடியில் பிரச்னை செய்த புகாரில் கைதான பாஜக பூத் முகவர் கிரி ராஜன் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு மேலூர் கிளைச்சிறையில் அடைப்பு – மார்ச் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா அப்டேட்

உலகளவில் இதுவரை 42.34 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 34.84 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 59 லட்சம் பேர் உயிரிழப்பு

பெட்ரோல் அப்டேட்

சென்னையில் 108 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.41 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உ.பி, பஞ்சாப் தேர்தல்

பஞ்சாப் சட்டமன்றத்துக்கு ஒரே கட்ட தேர்தலும், உத்தரப் பிரதேசத்தில் 3ம் கட்ட வாக்குப்பதிவும் இன்று நடைபெற உள்ளன. உ.பி.,யில் 16 மாவட்டங்களை உள்ளடக்கிய 59 சட்டமன்ற தொகுதிகளுக்கும், பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைக்கு தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இலங்கை டெஸ்ட் – இந்திய அணி அறிவிப்பு

இலங்கை டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள், டி20 போட்டிகளை தொடர்ந்து டெஸ்ட் தொடருக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

Live Updates

09:37 (IST) 20 Feb 2022
வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னையில் உள்ள 15 வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும் 150 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்


08:26 (IST) 20 Feb 2022
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கடைசி 20 ஓவர் போட்டி

கொல்கத்தா ஈடன் கார்டனில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.