ஒட்டவா : கனடாவில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டம் நடப்பதால், கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், இந்திய மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வட அமெரிக்க நாடான கனடாவில், கொரோனா பரவலை தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்து நாடு தழுவிய அளவில், போராட்டம் நடந்து வருகிறது.கனடாவின் கியுபெக் மாகாணத்தில் உள்ள மூன்று கல்லுாரிகளில், இந்திய மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். பல மாணவர்கள், கல்லுாரி விடுதிகளில் தங்கி படிக்கின்றனர்.
போராட்டம் காரணமாக, இந்த கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் பலரும், இந்திய துாதரகத்தில் புகார் செய்துள்ளனர்.இதுபற்றி, கனடா நாட்டு கல்வித்துறையிடம் பேசி வருவதாகவும், இந்திய மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை , அவர்களுக்கு கல்லூரிகளின் நிர்வாகம் திரும்பி வழங்க வலியுறுத்தி வருவதாகவும், கனடா தலைநகர் ஒட்டவாவில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.
ஒட்டவா : கனடாவில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டம் நடப்பதால், கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், இந்திய மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.வட அமெரிக்க நாடான கனடாவில்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.