காலையில் 4 கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?



உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் கறிவேப்பிலை சேர்க்கப்படுகிறது. ஆனால் இதை பலரும் சாப்பிடாமல் தூக்கி எறிந்துவிடுவோம்.

கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்னவெல்லாம் அற்புதங்கள் நடக்கும் தெரியுமா?

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை பிரச்சனை தீரும்.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோயை நெருங்கவிடாமல் செய்யும்.

கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.