சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் சக்கரம் கழன்று விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், கள்ளகிணறு அருகே நெல்லையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி 47 பயணிகளுடன் அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் முன் சக்கரம் கழன்று ஓடியது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் ஹேண்ட் பிரேக்கை பிடித்து பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பேருந்தில் இருந்த பயணிகள் வேறொரு பேருந்து மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தாராபுரம்-கோவை சென்றகொண்டிருந்தஅரசு பேருந்தின் முன்பக்க சக்கரம் திடீரென்று கழன்று சென்றுவிட்டது ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பேருந்து நிலை தடுமாறாமல் உடனடியாக நிறுத்தப்பட்டது.
#இடம்: #துத்தாரிபாளையம்
அரசு போக்குவரத்து கழகம் நல்லபராமரிப்பு @CMOTamilnadu @RRajakannappan @abm_tn pic.twitter.com/rb6spSOPMB— Nowshath A (@Nousa_journo) February 20, 2022
நடுவழியில் நின்ற பேருந்து கிரைன் மூலம் அகற்றப்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.