அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு!

வாஷிங்டன்,
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. அங்கு கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 8 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதே போல் அங்கு 9½ லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை கொரோனா பறித்துள்ளது.

அமெரிக்கா ஒரே நாளில் 41,443 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும்,  ஒரே நாளில் 715 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பால் இதுவரை மொத்தம் 9 லட்சத்து 59 ஆயிரத்து 130 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், வைரசை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த அவசர நிலை அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதியுடன் முடிவுக்கு வர இருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அவசர நிலையை மேலும் நீட்டித்து ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று உத்தரவிட்டார். 
அமெரிக்காவை கொரோனா பாதிப்பு அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனா தடுப்பூசியின் 3 டோஸ்களையும் செலுத்திக்கொண்ட அமெரிக்காவில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக இருந்து வருபவரான இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்திக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.