லண்டன்: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்திற்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 95 வயதாகும் அரசி இரண்டாம் எலிசபெத்திற்கு கோவிட் உறுதியாகி உள்ளது. லேசான அறிகுறி மட்டுமே தென்படுகிறது. அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்படுகிறது. அனைத்து விதிமுறைகளையும் அரசி பின்பற்றுவார். அதேநேரத்தில் தனது கடைமைகளையும் அவர் பின்பற்றுவார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அரசியின் மகனான இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோர் கோவிட்டால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில், கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கோவிட் தொற்றுக்கு உள்ளாகும் ஒருவர் 10 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும். அதில் 6 மற்றும் 7வது நாளில் எடுக்கப்படும் பரிசோதனையில் முடிவு நெகட்டிவ் என வந்தால், தனிமைபடுத்துதலை முடித்து கொள்ளலாம்.
லண்டன்: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்திற்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது.இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 95 வயதாகும் அரசி இரண்டாம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.