இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வரும் 23, 24-ம் தேதிகளில் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த 23 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் பாகிஸ்தான் பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும்.
ரஷ்ய சுற்றுப்பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் புதினை இம்ரான்கான் சந்தித்துப் பேசுகிறார்.
கடந்த 1999-ம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் செய்து இருந்தார். அதன்பிறகு இம்ரான்கான் செல்ல இருக்கிறார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இம்ரான்கானின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதையும் படியுங்கள்…அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 கோடியை கடந்தது