பொரியல், சூப்… முருங்கை இலையில் ஈஸியான 2 ரெசிபி!

Murunkai keerai soup and poriyal recipe in Tamil: அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள, முருங்கை கீரையைக் கொண்டு சுவையான, ஆரோக்கியமான, சூப் மற்றும் பொரியல் எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் முருங்கை மரம் ஏறக்குறைய எங்கும் பரவிக் காணப்படுகிறது. முருங்கை கீரையில் ஆரஞ்சுப் பழங்களை விட வைட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்த சோகையை எதிர்த்துப் போராட உதவுகிறது. இந்தக் கீரையைக் கொண்டு ரசம் முதல் பொரியல் வரை, பல உணவு வகைகளைச் செய்யலாம்.

கொரோனா தொற்றானது, மக்களை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் பொருட்களில் கவனம் செலுத்த வைத்துள்ளது. முருங்கைக்காய் மற்றும் முருங்கை கீரை மீதான மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதற்கு இதுவும் ஒரு காரணம். முருங்கை கீரையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளை அதிகரிக்க வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் பி, துத்தநாகம் போன்றவை உள்ளது. மற்ற நன்மைகளாக அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.

இத்தகைய முருங்கை கீரையைக் கொண்டு சூப் மற்றும் பொரியல் செய்வது எப்படி என்பது இங்கே.

முருங்கை இலை சூப் ரெசிபி

தேவையான பொருட்கள்:

முருங்கை கீரை: 1 கட்டு

மசூர் பருப்பு: 100 கிராம்

பூண்டு பற்கள்: 20 கிராம்

வெங்காயம்: 30 கிராம்

எண்ணெய்: 30 மி.லி

இலவங்கப்பட்டை: 2 கிராம்

கிராம்பு: 2 கிராம்

இஞ்சி: 20 கிராம்

மஞ்சள் தூள்: 2 கிராம்

சீரகம்: 3 கிராம்

கறிவேப்பிலை: 1 கொத்து

உப்பு: தேவையான அளவு

காய்ந்த மிளகாய்: 3 கிராம்

கடுகு: 2 கிராம்

பெருங்காயம்: 1 கிராம்

செய்முறை:

முதலில், முருங்கை கீரையை தண்டுகளில் இருந்து பிரித்தெடுத்து, கழுவி சுத்தப்படுத்தி வேக வைத்துக் கொள்ளவும்.

மசூர் பருப்பை இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து வேகவைக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.

அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்

இப்போது, ​​வேகவைத்த மசூர் பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்ததும், அதனுடன் வெந்த முருங்கை கீரையைச் சேர்க்கவும்.

நன்றாக கலக்கவும். அதனுடன் உப்பு மற்றும் பெருங்காயத்தைச் சேர்க்கவும்.

மசாலாவை சரிபார்த்து, சூப்பை வடிகட்டவும்.

இளஞ்சூடாக பரிமாறவும்.

இதையும் படியுங்கள்: சுகருக்கு குட் பை… இந்த 5 பழங்களை ஒருபோதும் மிஸ் பண்ணாதீங்க!

முருங்கை இலை பொரியல்  

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் : 10

முருங்கை கீரை : 2 கைப்பிடி அளவு

பூண்டு (நசுக்கப்பட்டது): 2-3 பற்கள்

காய்ந்த மிளகாய்: 2

மஞ்சள்தூள்: 1/4 தேக்கரண்டி

பெருங்காயம்: ஒரு சிட்டிகை

தயிர்: 1 ஸ்பூன்

தாளிக்க:

கறிவேப்பிலை: ஒரு கொத்து

உளுத்தம் பருப்பு: 1/2 தேக்கரண்டி

கடுகு: 1/4 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்: 2

நல்லெண்ணெய்: 1 தேக்கரண்டி

செய்முறை:

முருங்கை கீரையைக் கழுவி தனியாக வைக்கவும்

கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் சிவப்பு மிளகாயை நல்லெண்ணெயில் தாளிக்கவும்.

பிறகு வெங்காயம், பெருங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கவும்.

இப்போது முருங்கை கீரைகளைச் சேர்த்து கிளறவும்.

சமையல் பாத்திரத்தின் மீது ஒரு மூடி வைத்து, மிதமான தீயில் ஐந்து நிமிடம் வேக விடவும்.

நீங்கள் பரிமாறும் முன் தயிர் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

இந்த ஆரோக்கியமான ரெசிபி முருங்கை இலைகளின் நன்மையை அதிகம் தக்கவைக்கிறது. தயிர் ஒரு நல்ல சுவை தருவதோடு, ஒரு தனித்துவமான அமைப்பையும் சேர்க்கிறது. இதை சாதம் மற்றும் சாம்பார் அல்லது ரசத்துடன் சேர்த்து பரிமாறவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.